உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) சமீபத்தில் வெளியிட்ட "எதிர்கால வேலைவாய்ப்பு அறிக்கை 2025" (Future Job Report 2025) பல சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கை, அடுத்த சில வருடங்களில் வேலைவாய்ப்புச் சந்தை எப்படி மாறப்போகிறது என்பதைப் பற்றிய ஒரு கணிப்பை வழங்குகிறது. அதில் சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம்!
7.8 கோடி புதிய வேலைவாய்ப்புகள்!
முதல் நல்ல செய்தி என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சி, பசுமைப் புரட்சி மற்றும் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 7.8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்!
எந்த வேலைகளுக்கு மவுசு கூடும்?
முக்கியமா, சில துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்னு சொல்லியிருக்காங்க. முக்கியமான சில துறைகள் இங்கே:
- தொழில்நுட்பம் (Technology): AI, Machine Learning, Data Science, Cloud Computing போன்ற துறைகளில் திறமையானவர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கொட்டிக்கிடக்குது.
- பசுமைப் பொருளாதாரம் (Green Economy): புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
- சுகாதாரம் மற்றும் பராமரிப்பு (Healthcare and Care Economy): வயதானவர்களுக்கு பராமரிப்பு, மருத்துவ சேவைகள் தேவை அதிகரிக்கும்.
- முன்னணிப் பணியாளர்கள் (Frontline Workers): டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் தேவை இருக்கும்.
இந்த வேலைகளில் ஆட்கள் குறையும்
அதே நேரத்தில், அலுவலகப் பணிகளில் (Clerical jobs) வேலைவாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளது. தானியங்கிமயமாக்கல் (Automation) காரணமாக, சில பணிகள் ரோபோக்கள் மற்றும் கணினிகளால் செய்யப்படலாம்.
திறன் மேம்பாடு அவசியம்!
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, நம்மை தயார்படுத்திக்கொள்வது அவசியம். புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது, ஏற்கனவே இருக்கும் திறன்களை மேம்படுத்துவது (Upskilling and Reskilling) மிகவும் முக்கியம். குறிப்பாக, படைப்புச் சிந்தனை (Creative thinking), நெகிழ்ச்சித்தன்மை (Resilience) போன்ற மனிதத் திறன்களுக்கு அதிக மதிப்பு இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
என்ன திறன்களை வளர்த்துக்கொள்வது?
இந்தத் திறன்களை வளர்த்துக்க நிறைய வழிகள் இருக்கு. இங்க சில டிப்ஸ்:
- ஆன்லைன் படிப்புகள் (Online Courses): Coursera, Udemy, edX போன்ற தளங்கள்ல நிறைய ஆன்லைன் கோர்ஸ்கள் இருக்கு. நம்ம தேவைக்கு ஏற்ற மாதிரி கோர்ஸ்களைத் தேர்ந்தெடுத்துக்கலாம்.
- புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் (Books and Articles): நிறைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் இருக்கு. படித்து தெரிஞ்சுக்கலாம்.
- செமினார்கள் மற்றும் வொர்க்ஷாப்புகள் (Seminars and Workshops): செமினார்கள் மற்றும் வொர்க்ஷாப்புகள்ல கலந்துக்கிட்டு, நிபுணர்களிடம் கத்துக்கலாம்.
- நெட்வொர்க்கிங் (Networking): நம்ம துறையில் இருக்கிறவங்களோட தொடர்பு வெச்சுக்கிறது ரொம்ப நல்லது. அவங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம்
No comments:
Post a Comment