Thursday, February 27, 2025

ப்ரொகிராமில் ஒரே ஒரு ‘ஹைபன்’ பிழை.நாசாவிற்கு கோடிகளில் நஷ்ட்டம்

 



விண்வெளி ஆராய்ச்சியில் நாசா பல சாதனைகளை படைத்துள்ளது. ஆனால், 1962 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நடந்த ஒரு நிகழ்வு, தொழில்நுட்பத்தில் எவ்வளவு சிறிய பிழை இருந்தாலும், அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நமக்கு உணர்த்தியது.

மரைனர் 1 - ஒரு கனவு பயணம்:

வீனஸ் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட மரைனர் 1 விண்கலம், நாசாவின் முக்கியமான திட்டங்களில் ஒன்று. ஆனால், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே, அது கட்டுப்பாட்டை இழந்து திசை மாறியது. ஆபத்தை உணர்ந்த விஞ்ஞானிகள், விண்கலத்தை வெடிக்கச் செய்து அழித்தனர்.

என்ன நடந்தது?

விண்கலத்தின் வழிகாட்டுதல் மென்பொருளில் ஒரு சிறிய பிழை இருந்தது. "ஹைபன்" என்று நாம் சொல்லும் ஒரு சிறிய கோடு, அதாவது ஒரு கணிதக் குறியீடு (overbar/vinculum) விடுபட்டது. இந்தத் தவறு, கணினி தவறான வேகக் கணக்கீடுகளைச் செய்ய வழிவகுத்தது. இதன் விளைவாக, விண்கலம் தவறான பாதையில் சென்றது. பூமியில் யார் மீது விழாமல் இருக்க செயற்க்கையாக வானிலேயே வெடிக்கப்பட்டது.

ஒரு சின்ன கோடு, பெரிய இழப்பு!

இந்தச் சம்பவத்தின் மூலம், மென்பொருள் மேம்பாட்டில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாசா உணர்ந்தது. அதுமட்டுமல்ல, விண்வெளி ஆராய்ச்சியில் மிகச் சிறிய தவறு கூட எவ்வளவு பெரிய அழிவை ஏற்படுத்தும் என்பதையும் உணர்த்தியது.

நாம் எழுதும் ப்ரோக்ராம்கள் ஒரு சிறு பிழை கூட எவ்வலவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மரைனர் 1 இன் தோல்வி, துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான பாடமாக அமைந்தது.


No comments:

Post a Comment

CAPTCHA என்றால் என்ன? I am not robot

  இணையத்தில் உலாவும்போது பலமுறை "CAPTCHA" என்ற வார்த்தையை பார்த்திருப்பீர்கள். "நான் ரோபோ இல்லை" என்று ஒரு பெட்டியை டிக்...