Monday, February 24, 2025

க்ரிப்ட்டோ எக்ஸ்சேஞ் பைபிட் நிறுவன Hack நமக்கு சொல்லும் எச்சரிக்கை.

அண்மையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபாரான பின்  அமெரிக்காவை "கிரிப்டோ தலைநகரமாக" மாற்றும் வாக்குறுதிகளால் கிரிப்டோகரன்சி முதலீடுகள்  தொழில் புத்துயிர் பெற்றிருந்தது. ஆனால் , இந்த வளர்ச்சிக்கு  ஆப்பு வைப்பதுன்போல் ஒரு  ஹேக்கிங் சம்பவம் நடந்துள்ளது. பைபிட் (Bybit) கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் நடந்திருக்கும் பெரிய  ஹேக்கிங் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த ஹேக்கிங்கின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. யாரும் பொறுபேற்க்கவில்லை. ஆனால் பயனாளர்களுக்கு எந்த நஷ்ட்டமும் வராமல் நிறுவனமே பணத்தை கொடுப்பதாக பொறுபேற்றுள்ளது. 

 ஒருவேளை முந்தைய பெரிய ஹேக்கிங் சம்பவங்களில் ஈடுபட்ட வட கொரியாவின் லாசரஸ் குழு போன்ற அரசு ஹேக்கர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஆனால் ஆதரம் இல்லை.குறிப்பாக, 2022-ல் ரோனின் குழுமத்தில் இருந்து 615 மில்லியன் டாலர் திருடப்பட்ட சம்பவத்தில் லாசரஸ் குழுவின் பங்கு சந்தேகிக்கப்பட்டது. நிருபிக்கபடவில்லை. இன்றுவரை எல்லாம் கதை தான்.
ஆனால் இந்த ஹேக்கிங் கிரிப்டோ சந்தையில் அதிர்ச்சி விளைவுகள் ஏற்படுத்தியுள்ளது தான்.

 இந்த ஹேக்கிங், கிரிப்டோ சந்தையின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பயனாளார் முதலொடு செய்கிறார் சரி, ஆன அந்த நிறுவனத்தை ஹேக்கிங் செய்தால் பயனளார்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதற்க்கு முன்பும் இது போன்ற நிறுவனங்கள் ஹேக் செய்யபட்டு மஞ்சள் நோட்டிஸ் கொடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளது.

 இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும்  நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது.

 அமெரிக்காவில் மு உலகம் முழுவதும்  மீண்டும் கிரிப்டோ ஒழுங்குமுறை தொடர்பான விவாதங்கள்  சூடுபிடிக்கலாம்.

 கிரிப்டோ முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம். எப்போதுமே.
 அரசுகள் கிரிப்டோ ஒழுங்குமுறைகளை கடுமையாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.குறிப்பாக சைபர் பாதுகாப்பு விஷயத்தில். சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிரிப்டோ பரிமாற்றங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

இந்த ஹேக்கிங் சம்பவம், கிரிப்டோ தொழிலுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. கிரிப்டோ பரிமாற்றங்கள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும், முதலீட்டாளர்கள் விழிப்புடன் செயல்படவும் இது ஒரு வாய்ப்பு.


No comments:

Post a Comment

CAPTCHA என்றால் என்ன? I am not robot

  இணையத்தில் உலாவும்போது பலமுறை "CAPTCHA" என்ற வார்த்தையை பார்த்திருப்பீர்கள். "நான் ரோபோ இல்லை" என்று ஒரு பெட்டியை டிக்...