ஒருவழியாக ஆண்களுக்கான on- demand கருத்தடை மாத்திரைகளுக்கான சோதனையில் வெற்றி அடைந்துள்ளார்கள் Weill Cornell மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்..
அனைத்து கருவுற்றலும் மகிழ்ச்சி அளிப்பதில்லை, பல கருவுற்றல் தவறுதலாக நடப்பவை. கருத்தடைக்கு இப்போது பெண்களுக்கான சில மாத்திரைகள், ஆணுக்கு ஆணுறைகள், இருவருக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை மொத்தமாக கருத்தடை ஏற்படுத்திவிடும். பின்னால் விருப்பப்பட்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.
ஒருபக்கம் குழந்தை பெறு பிரச்சனைக்கான ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்க மறுபக்கம் விரும்பாத,விபத்தாக கருவுற்றலை தடுக்கும் ஆய்வுகளும் நடந்துவருகிறது.
இப்போது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மாத்திரைகள் தற்காலிகமான கருத்தடை ஏற்படுத்தும். ஒருநாள் வரை இதன் தாக்கம் இருக்கும். மாத்திரை உட்கொள்ளும் வடிவில் தான். எல்லாம் ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறது. இந்த மாத்திரையை உட்கொண்டால் விந்தணு கருமுட்டையில் நீந்த சிக்னல் கொடுக்கும் Soluble adenylyl cyclase (sAC) எனும் புரதத்தை தற்காலிகாமக தடுத்து நிறுத்துகிறது இதனால் விந்தணு செயலற்று கரு உண்டாகமல் தடுக்கப்படுகிறது.
கிட்டவிட்ட வையாக்ரா மத்திரையின் எதிர்ப்பத வேலை செய்கிறது. இப்போது எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி, அடுத்து முயல் மீது சோதனைகள் நடக்கும். இறுதியாக மனிதர்களுக்குச் சோதனை நடக்கும். ஆனால் Weill Cornell நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே இந்த மருந்துகளை பெருமளவு விளம்பரப் படுத்தி உற்பத்தி செய்ய Sacyl Pharmaceuticals எனும் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்கள்.
வரும் 2050க்குள் உலகின் மக்கள் தொகை 10 பில்லியின் ஆகிவிடும் என கணக்கிட்டுள்ளார் ஒரு வகையில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை மாத்திரை பல நன்மைகளைக் கொடுக்கலாம். ஆனால் இதன் அரசியல் பக்கத்தை நாம் பார்க்கத் தவறவும் கூடாது. இது bio weaponஆக இன அழிப்புக்கு பயணப்படுத்தப்படுமா? இதன் பக்க விளைவுகள் என்ன? எனப் பல கேள்விகளுக்குப் பதில் வேண்டும் தானே..வினோத் ஆறுமுகம்
15-02-2023
@thiruvinod4u
No comments:
Post a Comment