நம் முதுகெலும்பில் உள்ள வட்டுகள் (Spinal Disc) தேய்ந்துவிட பல காரணங்கள் இருக்கிறது. சில நேரத்தில் விபத்தில் கூட முது பலமாகச் சேதமாகலாம். இதற்கு பெரும்பாலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தண்டுவடத்தில் உள்ள வட்டுகளை செயற்கை வட்டுகள் பொருத்தி மாற்றிவிடுவார்கள். உலகம் முழுவதும் பலர் இடந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்கிறார்கள். இதன் ஆண்டு சந்தை மதிப்பு மாத்திரம் 1 பில்லியின் டாலர்.
இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் நடப்பதில் இருந்து படுப்பதுவரை பல சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கையே முடங்கி படுத்த படுக்கையாகி விடுவார்கள். எந்நேரமும் முதுகு வலியுடன் அவதிப்பட வேண்டும்.
இந்த அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது பொருத்தப்படும் செயற்கை வட்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. மெல்ல மெல்ல அவையும் தேய்ந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனைக்கு Dymicron எனும் நிறுவனம் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது.
வைரம்.
ஆம் Polycrystalline Diamond எனும் செயற்கை வைரத்ததினால் செய்யப்படும் வட்டுகளை இந்த அறுவை சிகிச்சைக்கு பயனப்படுத்துகிறார்கள். இதுவரை சுமார் 500 நோயாளர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள். இவர்கள் இதற்காக சுமார் 83 காப்புரிமைகளையும் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் ஆய்வுகள் செய்தால் வெற்றிகரமாக இதன் அறுவை சிகிச்சை செலவையும் குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தங்கள் முதுகெலும்பு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.
உலகம் முழுவதும் இந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் சந்த மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்.
இந்தியாவில் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டனம் வசூலிக்கிறார்கள்.
No comments:
Post a Comment