Showing posts with label tamil breaking news. Show all posts
Showing posts with label tamil breaking news. Show all posts

Tuesday, May 16, 2023

பொன்னியின் செல்வனில் ஏன் யாரும் கறுப்பாக இல்லை : Jessica Heidt பற்றி

 பொன்னியின் செல்வனில் ஏன் யாரும் கறுப்பாக இல்லை : Jessica Heidt பற்றி .



 பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் காட்டப்படும் அனைத்து தமிழ் நில கதாபாத்திரங்களும் சிவப்பாகவே காட்டப்படுகிறது.  ஆனால் இந்த கட்டுரை பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியது அல்ல உங்களுக்கு ஜெசிக்கா ஹைடிட் என்பவரை அறிமுகப்படுத்த.


 பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்கும் போது அது நடந்த காலகட்டத்தில் தமிழர்களின் நிறம் என்பது கருப்பாகவும் மாநிறம் ஆகும் இருந்ததாகவே பல குறிப்புகள் கூறுகின்றன.  சும்மா இருநூறு ஆண்டுகளில் கூட  தமிழகத்தின் பயணம் செய்த  பலரின் குறிப்புகளிலும் தமிழக மக்களின் கருமை நிறத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.  அறிவியல் படியும் தமிழ் நிலம் சார்ந்த இடத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கருப்பு நிறத்தோல் அவர்களின் வாழ்வியலை எளிமையாக உதவி இருக்கும்.


 இன்றைய காலகட்டத்தில் பல கலப்புகள் மற்றும் அதில வீண அறிவியல் தோல் மேலாண்மை காரணமாக நிறங்களில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதை நாம் அறிகிறோம்.


 ஆனால் பொன்னியின் செல்வன் நடப்பதாக கூறும் காலகட்டத்தில் வாழ்ந்த கதாபாத்திரங்களை காட்டும் போது ஏன் இவர்கள் கருமை நிறத்தை தவிர்த்தார்கள் என்பது புரிந்து கொள்ள முடியவில்லை.  பொதுவாக தமிழ் சினிமாவில் வெண்மையான நடிகையை கூட்டி வந்து கருப்பு மை தடவையாவது கருமையாகவே காட்டுவார்கள்.


 பொன்னியின் செல்வன் படம் வந்து ஓய்ந்து விட்டதாலும், அந்தப் படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி விட்டதாலும் நாமும் அதன் பின்னால் செல்ல வேண்டாம். அதற்கு அவர்கள் பல காரணங்களை கூறக்கூடும். ஆனால் நான் இங்கு பேச வருவது தமிழ் சினிமாவில் கலாச்சார ரீதியாக உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை பற்றி.

 

கருமை நிறம் என்றால் அழகில்லை சிவப்பு நிறம் தான் அழகும் மேன்மையும் என்பது ஆரியர்களாலும் பின்னால் வெள்ளைக்காரர்களாலும் கலாச்சார ரீதியாக நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தவறான கருத்து.  கருமை என்றால் அடிமை என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  ஆனால் சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் கருமை நிறத்தை மிகத் தாழ்வானதாக காட்டி அவர்கள் வியாபாரம் செய்வதோடு ஒரு கலாச்சார யுத்தத்தை நம் மீது திணிக்கிறார்கள்.  கருமை நிறம் என்பது தாழ்வு மனப்பான்மைக்கான நிறம் என நமக்கு தாழ்வு மனப்பான்மையின் ஏற்படுத்துகிறார்கள்.  இத்தகைய ஒரு மோசமான ஆதிக்க வர்க்க கருத்தை சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் நம் மீது மிக எளிதாக திணித்து விடுகிறார்கள்.  அந்த கருத்தின் நீச்சு தான் பொன்னியின் செல்வனின் வரும் கதாபாத்திரங்களின் நிறம்.

 நிற்க.


 ஒரு இயக்குனருக்கு சுதந்திரம் உள்ளது அதே நேரம் ஒரு இயக்குனர் என்பவர் இந்த சமூகத்தில் இருந்து வருபவர்.  சினிமா என்பதும் வியாபாரம் தொடர்பானது பெரும்பான்மை மக்களை ஈர்த்தால் தான் அவர்களால் லாபம் பார்க்க முடியும்.  இந்த இரண்டு கருத்தும் இணையும் புள்ளியில் பெரும்பான்மை மக்களின் மனதில் இருக்கும் ஒரு விஷயம் இயக்குனரையும் தாக்கி அந்த இயக்குனர் தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய ஆதிக்கவருக்கு கருத்துக்களை தன் சினிமாவில் அனுமதிக்க செய்து விடுவார். 


 இந்த கட்டுரை சினிமாவையும் இயக்குனர்களையும் இழிவுபடுத்த அல்ல மாறாக இதை எப்படி எதிர்கொண்டு வெளிவரலாம் என்பதை பற்றி தான்.


 இதற்கு தான் பிக்சார் நிறுவனத்தில் திரைக்கதை மேற்பார்வையாளராக இருக்கும் ஜெசிக்கா ஹைடேட் (Jessica Heidt) ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளார்.


 பிக்சர்(PIXAR) நிறுவனம் என்பது அனிமேஷன் தொடர்பான திரைப்படங்களை உருவாக்கி பல பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டிய நிறுவனம்.  பிக்சாரின் அனிமேஷன் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.  அந்தப் பிக்சர் நிறுவனத்தின் கதை மற்றும் திரைக்கதை பிரிவில் பணிபுரிபவர் தான் ஜெசிக்கா ஹைடேட்.  இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர். 


 பல்வேறு பிக்ஸார் நிறுவனத்தின் திரைக்கதைகளை அலசி ஆராய்ந்த போது ஜெசிக்கா ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார்,  பிக்சார் நிறுவன திரைகதைகளில் ஆண் கதாபாத்திரங்களுக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கும் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. இது ஒரு வகையான பாலின சமத்துவத்தை தடுப்பதாக உள்ளது.  ஒவ்வொரு படத்திலும் அதிகமான ஆண் கதாபாத்திரங்களும் மிகக் குறைவான பெண் கதாபாத்திரங்களும் இருப்பதை அவர் கவனித்தார்.  நிச்சயம் இதை சரி செய்ய வேண்டும் என அவரின் பயணத்தை தொடங்கினார்.

 அவர் எதிர்கொண்ட முதல் சிக்கல்  படைப்பு சுதந்திரம்.  ஒரு திரை கதையை உருவாக்குபவருக்கு நிச்சயம் கருத்து சுதந்திரமும் படைப்புச் சுதந்திரமும் தேவை.  என்பதால் சரியாக எத்தனை கதாபாத்திரங்கள் என்பதை அவரால் எண்ணிக்கையுடன் உருவாக்க முடியாது என்று கூறினார்கள்.

 ஆனால் ஜெசிக்கா எடிட் முன்வைத்த வாதம் ஒரு திரைக்கதையாளர் மையக்கருவை எடுத்துக்கொண்டு அதற்கான கதாபாத்திரங்களையும் சூழலையும் உருவாக்குகிறார் அதாவது திட்டமிட்டு இன்ஜினியரிங் செய்கிறார்.  அப்படி இருக்க பயிற்சிகளின் மூலம் தாராளமாக இந்த பாலின சமத்துவ திரைக்கதைகளை படைப்பு சுதந்திரத்துடன் உருவாக்க முடியும் என்பதை உறுதியாக வாதிட்டார்.  பிக்சார் நிறுவனத்தில் வேலை செய்த பல திரைக்கதையாளர்கள் ஜெசிக்காவை புரிந்து கொண்டார்கள்.


 அடுத்ததாக ஜெசிக்கா ஒரு மென்பொருளை உருவாக்கினார்.  செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு திரை கதையை உள்ளீடாக கொடுத்தால்,  அதில் உள்ள பாலின சமத்துவத்தை கதாபாத்திரங்களின் எண்ணிக்கை வசனம் போன்றவற்றிலிருந்து சுட்டிக்காட்டும்.  அந்த ஆய்வு அறிக்கையை திரைக்கதையாளருக்கு ஜெசிக்கா அனுப்புவார்.  அதன் அடிப்படையில் திரைக்கதையையும் வசனங்களையும் மேம்படுத்துவார்கள்.

 அடுத்ததாக ஜெசிக்கா ஹைடிட் கண்டுபிடித்தது பிக்சார் நிறுவனத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் கதாநாயகர் உட்பட அனைவருமே வெள்ளை இனத்தவர் ஆக காட்டப்பட்டு இருந்தது.  இதை சுட்டிக்காட்டிய பின் கருப்பின மக்களை கதாநாயகனாகக் கொண்ட திரைப்படங்களும் பின்னால் திரைக்கதையில் கருப்பின மக்கள் சுட்டிக்காட்டும் கதாபாத்திரங்களும் புதிதாக சேர்க்கப்பட்டன.

சோல் என்ற படம், பிக்ஸர் நிறுவனத்தில் முதல் கறுப்பின ஹீரோவை கொண்ட படம்.

 பிக்ஸார் நிறுவனத்தில் தொடங்கிய இந்த சிறு திரைக்கதைப்பு புரட்சி இன்று உலகம் முழுவதும் பலராலும் ஏற்கப்பட்டு வருகிறது.  திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபடும் அனைவருக்கும் தங்களுக்கே தெரியாமல் தங்கள் நினைவில் ஆதிக்க கருத்துக்களும் சமத்துவ பேதங்களும் உள்ளேன் நுழைந்திருக்கும்.  திரைக்கதை மற்றும் வசனத்தில் இது வெளிப்படும்.  அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஆனால் ஜெசிக்கா எடிட் போன்ற சமூக நீதி பற்றிய புரிதல் கொண்டவர்கள் திரைக்கதை மேற்பார்வையாளராக அமர்த்தி அந்த திரை கதைகளை அலசி ஆராய்ந்து அதை சமத்துவ பேதமற்ற திரைக்கதையாக உருவாக்க வேண்டியது தான் நம் கடமை.  இதை தேவையில்லாமல் படைப்பு சுதந்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு கடமையை மறுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 


குழப்பம் விளைவிக்கும் ‘கூகுள் டாக்டர்’

 என் நண்பர் ஒருவருக்கு வயிற்று வலி. மூன்று நாளுக்கு மேல் வலி தொடர்ந்தது. ஆனாலும் அவர் மருத்துவரிடம் போகவில்லை. அலுவலகத்தில் இருக்கும்போதே இணையத்தில் வயிற்று வலி பற்றிய குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்படித் தேடிய ஒரு தளத்தில், வயிற்றுவலி தொடர்பான மேலும் சில அறிகுறிகளைப் பட்டியல் இட்டிருந் தார்கள். நண்பருக்கு அனைத்தும் இருப்பதுபோல் ஒரு பிரமை சூழ்ந்தது. இறுதியில் அவருடைய வயிற்றில் கேன்சர் இருப்பதாக, அவரே உறுதி செய்துகொண்டு நேராகப் புற்றுநோய் நிபுணரிடம் சென்றுவிட்டார்.

பல பரிசோதனைகள், பல மருத்துவர் களைக் கண்ட பின் அவருக்கு இருந்தது வாயுத் தொல்லை என்றும், அத்துடன் லேசாக வயிற்றுப் புண்ணும் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய மருந்துகளைச் சாப்பிட்ட சில வாரங்களில் அவருக்குச் சரியாகிவிட்டது. ஆனால், அவருடைய அதீதப் பயத்தைப் போக்கத்தான் இப்பொழுது மனநல மருத்துவரிடம் போய்க்கொண்டிருக்கிறார். இந்த அவலம் தேவையா?



மாறாத வதந்திகள்

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று உலகையே சிறு கிராமமாக்கி விட்டது. சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் வருகையால், விரல் நுனியில் தகவல்கள் குவிந்துவிடுகின்றன. விஞ்ஞானத்தின் வளர்ச்சி நன்மைகளைக் கொண்டுவந்தாலும், அதை முறைகேடாகப் பயன்படுத்த நினைப்பவர்களால் சமூகத்தில் பல குழப்பங்களும் உருவாகின்றன. அதில் முக்கியமான ஒன்று மருத்துவர்களைச் சமீப காலமாகப் பாடாய்ப்படுத்தும் தவறான மருத்துவத் தகவல்கள், வதந்திகள்.
நம்பிக்கை சார்ந்த மருத்துவக் குறிப்புகள், வதந்திகள், மூடநம்பிக்கை கள் போன்றவை எல்லாம் திடீரெனப் பிறந்தவை அல்ல. காலம் காலமாக இருப்பவைதான். ஆனால் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் முன்னைவிட அவை அதிவேகமாகப் பரவி விடுகின்றன. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் வருவதால் பலர் அதை நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் இதில் அவலம். “வாட்ஸ்அப்பில் வந்தால் சரியாகத்தான் இருக்கும்” எனப் பலரும் தீவிரமாக நம்புகிறார்கள். அத்துடன் இணையத்தில் இருக்கும் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு மருத்துவர்களிடம் சந்தேகத்துக்கு மேல் சந்தேகங்களைக் கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள்.

அரைகுறை அறிவு
என்னுடைய நண்பர் ஒருவர் தன் மகனின் வலிப்பு பிரச்சினைக்காக மனநல மருத்துவர் ஒருவரிடம் சென்றிருந்தார். மருத்துவர் பரிசோதித்துவிட்டுச் சில மருந்துகளைப் பரிந்துரைத்தார். அதற்கு முன்பே என் நண்பர் தன் ஸ்மார்ட்ஃபோனில், இணையம் வழியாகச் சில தகவல்களைப் படித்துவிட்டு, “டாக்டர் இந்த மருந்தை உட்கொண்டால், லிவர் கெட்டுபோய்டுமாமே? சாப்பிடலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

கோபமடைந்த மருத்துவர் “மருந்தைச் சாப்பிடவில்லை என்றால், மூளை கெட்டுப்போய்டும் பரவாயில்லையா?” என்று பதிலுக்குக் கேட்டாராம்.
மருத்துவர்களிடம் சந்தேகம் கேட்கக் கூடாது என்பதல்ல. ஒவ்வொரு நோயாளிக்கும் தனக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை பற்றித் தெரிந்துகொள்ள முழு உரிமை இருக்கிறது. அரைகுறை அறிவுடன் மருத்துவக் குறிப்புகளைப் படித்துவிட்டு எழுப்பப்படும் சந்தேகங்கள்தான் இங்கே பிரச்சினை.

என்ன செய்வது?
முதலில் டிஜிட்டல் வழியாகப் பார்க்கும் மருத்துவத் தகவல்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை அப்படியே நம்ப வேண்டாம். அந்தத் தகவல்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களால், மருத்துவ இணையதளங்களிலோ அல்லது அரசிடமிருந்தோ வந்திருக்கின்றனவா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது நம்மிடம் நல்ல உறவைப் பேணும் மருத்துவரிடம் அது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மாறாக, நச்சரிப்பது நல்ல விளைவைத் தராது.

அடுத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் அல்லது வலைத்தளத்தில் ஒரு தகவல் கூறப்பட்டிருந்தாலும் அது பொதுவான தகவலாக இருக்கலாம். எல்லோருக்கும் அதே அறிகுறிகள், அதே பக்கவிளைவுகள் ஏற்பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.
இணையதளங்களில் ஒரு நோய் குறித்து அனைத்து விதமான சாத்தியங்களிலும் பட்டியலிட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட இணையதளங்களின் நோக்கம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ளச் செய்வது மட்டும்தான். சுய மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கு அல்ல. இணையத்தைப் பார்த்து நோயைச் சுயநிர்ணயம் செய்துகொள்வதும், அதற்கு நாமே மருத்துவம் பார்த்துக்கொள்வதும் பேராபத்தை விளைவிக்கக்கூடும். முறையான சிகிச்சைக்கான காலதாமதமும், தவறான சுயசிகிச்சையும் மீள வழியில்லாத நிலைக்கு நம் உடலைக் கொண்டுபோகும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.

இணையப் போலி மருத்துவர்கள்
மற்றொரு முக்கியப் பிரச்சினை வாட்ஸ்அப்பிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பரவும் தகவல்கள் அனைத்தும் அப்படியே உண்மை என்று நம்புவதுதான்.

மாற்று மருந்துகள், பாரம்பரிய மருந்துகள், எய்ட்ஸுக்கு மருந்து, புற்றுநோய்க்கு மருந்து என்று போலி மருத்துவர்களும், அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளும் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன. அவை வாட்ஸ்அப்பிலும் வலம் வருகின்றன. புற்றுநோய்க்கு அகத்தியர் கூறிய சித்த மருத்துவக் குறிப்பு என்றொரு தகவல் வாட்ஸ்அப்பில் வருவதாகவும், பல புற்றுநோயாளிகள் அதை நம்பி மருத்துவம் பார்த்துக்கொள்ள மறுப்பதாகவும் எனக்குத் தெரிந்த சித்த மருத்துவர் ஒரு முறை வருத்தப்பட்டார். ‘மாற்று மருத்துவர்கள்’ என்ற பெயரில் சில போலிகள் முன்பு பிட் நோட்டீஸ் வழியாகவே கணிசமாகப் பரவினார்கள். வாட்ஸ்அப் அவர்களுடைய வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க வைத்துவிட்டது.
மருத்துவத் தெளிவு

அதேநேரம், இணையத்தில் கூறப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகள்கூடப் பொதுவானவைதான். அதைப் படித்து அஞ்சத் தேவையில்லை. அது பெரும்பாலும் மருத்துவர்களுக்கான குறிப்புகள்தான். சில மருந்துகளின் பக்க விளைவுகள் அல்லது ஒவ்வாமை பற்றிய தகவல்களும் இணையத்தில் இருக்கும்.
பொதுவாக ஒருவருடைய ஒவ்வாமைகளை உறுதி செய்த பின்னரே மருத்துவர்கள் மருந்தைப் பரிந்துரைப் பார்கள். நாமும் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம். மருந்தை உட்கொண்ட பின் உடலில் மாற்றங்கள் நிகழ்ந்தால், மருத்துவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

தேவை உடனடி மருந்து
ஒரு விஷயம் மக்களின் பெரும்பான்மை பயன் பாட்டுக்கு வந்துவிட்டாலே அதைப் பற்றிய ஒரு கொள்கை, சட்டம், வழிகாட்டிகளை அரசு உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்பொழுது டிஜிட்டல் மருத்துவ வதந்திகள் பரவலுக்கு எதிராக அரசுடன் இணைந்து மருத்துவர்கள் மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தகவல் தளங்கள், உதவிகள் மூலம் தவறான தகவல்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ மாணவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் உதவியுடன் இதை மேற்கொள்ளலாம். போலியான மருத்துவத் தகவல்கள், மருத்துவ வதந்திகள் ஏற்படுத்தும் மன உளைச்சலும், பயமும், தகவல் தொழில் நுட்பம் கொண்டு வந்திருக்கும் புது வகை நோய்க் கிருமி. அதைத் தகவல் தொழில்நுட்பத்தை வைத்தே எதிர்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம்.

- வினோத் ஆறுமுகம்

நன்றி  Tamil The Hindu

Monday, May 15, 2023

எச்சரிக்கை! Telegramல் இலவசமாக படம் பார்ப்பவரா?


Telegram இல் உங்களுக்கு ஏன் ஒருவர் இலவசமாக படங்களை கொடுக்க வேண்டும்?  ஒரு படத்திற்கு டிக்கெட் செலவு ஆகக்கூடாது,  ஒரு ஓடிடிக்கு  சப்ஸ்கிரைப் பணம் கொடுக்க வேண்டாம் என்று நீங்களே பணத்தை மிச்சம் பிடிக்க telegramல் படத்தை டவுன்லோடு செய்கிறீர்கள்.  உங்களுக்கு பணம் மீது எவ்வளவு அக்கறை இருக்கும்போது உங்களுக்கு இலவசமாக கொடுப்பவர் மட்டும் சமூக சேவையா செய்வார்?

 டெலிகிராமில் படங்களை தரவிறக்கம் செய்வதிலும் பலவிதமான பாட்களை  அதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளது அதைப்பற்றி நாம் தெரிந்து கொண்டு எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

 telegram என்பது இன்று பலராலும் பயன்படுத்தப்படும் சேட் ஆப்.  உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.  தகவல் பரிமாற்றத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மிக முக்கியமான செயல் இது என பலர் நினைக்கிறார்கள்.  ஆனால் டெலிகிராமில் எதிர்பாராத விதமாக ஒரு முழு திரைப்படத்தையும் பகிரும் அளவு  வசதிகள் உள்ளது.  இதனால் விரைவிலேயே டெலெக்ராம் செயலி என்பது இலவசமாக புதிய படங்களை தரவிறக்க பயன்படுத்தப்பட்டது.

 தமிழ் ராக்கர்ஸ் அடுத்தபடியாக இன்று டெலிகிராமில் உலகம் முழுவதும் உள்ள படங்கள் மற்றும் ஓடிடி களில் வெளிவரும்  வெப் சீரியஸ்கள் பகிரப்பட்டும் தரவிறக்கப்பட்டும் வருகிறது இதற்காக யாரும் பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

 ஆனால் இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது.

 இந்த இலவச படங்களின் மூலம் சைபர் கிரிமினல்கள் ஏற்கனவே உங்கள் ஃபோன்களிலும் லேப்டாப் களிலும் நுழைந்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?


 சைபர் கிரிமினல்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒரு போன் உள்ளும் லேப்டாப் உள்ளும் நுழைவது மிகவும் கடினமான ஒரு செயல் அப்படி அவர்கள் நுழைந்து விட்டால் உடனடியாகவோ அல்லது பல நாட்கள் உங்கள் பூனை வேவு பார்ப்பதின் பல லாபங்கள் உண்டு.

  1.  நேரடியாக உங்கள் பணத்தை திருடுவது.

  2.  உங்களைப் பற்றிய தகவல்களைத் திருடி அதை டார்க் நெட்டில் விற்பதின் மூலம் பணம் பார்ப்பது.

  3.  உங்களை மெல்ல வேவு பார்ப்பது.

  4.  உங்களை ஏமாற்றி தவறான விஷயங்களில் முதலீடு செய்ய வைப்பது.

  5.  ரான்சம்வேர் எனும் முறையில்  உங்கள் போனை முடக்கி  பணயமாக பணம் கேட்பது.

 மேலே நாம் பார்த்த சைபர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் மால் பெயர்களை உங்கள் போனில் செலுத்த வேண்டும்.  மால் வேர்களை லிங்க் மூலம் அனுப்பி நீங்கள் கிளிக் செய்தால் தான் அந்த மால்வர் உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் நுழையும்.  அவ்வளவு எளிதாக நீங்கள் கிளிக் செய்து விட மாட்டீர்கள்.  ஒருவரை அந்த கிளிக் செய்ய வைக்க சைபர் கிரிமினல்கள் பல உளவியல் வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.


 ஆனால் இந்த இலவச திரைப்படங்கள் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. 

இதை நீங்கள் புரிந்து கொள்ள சைபர் கிரைமில் இரண்டு விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,

  1.  Malware Bundling

  2. Malvertising

Malware Bundling: இந்த முறையில் மால்வேர்களை  உண்மையான அப்ளிகேஷன் ஓடும் அல்லது திரைப்படம் பாடல்களோடும் இணைத்து சேர்த்து விடுவார்கள்.  இதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடலையும் படத்தையும் தரவிருக்கும் போது அதனுடனே மாபெரும் உங்கள் லேப்டாப் அல்லது ஃபோனில் டவுன்லோட் ஆகிவிடும். 

 ஒரு மால்வேர் என்பது  தீங்கான  செயலி.  அது உள்ளே வந்து விட்டால் போதும் உங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்காது நேரடியாக போய் உங்கள் போனை அடிமட்டம் வரை ஹேக் செய்து விடும்.


Malvertising: Telegramல் படம் டவுன்லோட் செய்த அனைவருமே இந்த  Malvertisingஐ  பார்த்திருப்பீர்கள்.  தீங்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அட்வர்டைஸ்மென்ட் பக்கம் தான் Malvertising page. Malvertising  என்றால் malicious advertising என பொருள்.
நீங்கள் படத்தை டவுன்லோட் செய்யும் பக்கத்தில் “DOWNLOAD”  என்ற வார்த்தை அல்லது பட்டன்கள் பல இருக்கும் அதில் தெரியாமல் நீங்கள் ஒரு டவுன்லோட் பட்டனை அழுத்தி விட்டால் உங்களுக்கே தெரியாமல் தீங்கான செயலி உங்கள் போனுக்குள் நுழைந்து விடும்.  நிற்க இப்போதெல்லாம் இந்த பக்கத்தை நீங்கள் திறந்தாலே அந்த நொடியில் தீங்கான செயலிகள் உங்கள் போனுக்குள் நுழைந்து உங்கள் போனை ஹேக் செய்து இருக்கும்.

 இதைப்பற்றி நான் விளக்கும் போது பலரும் என் போனில் என்ன இருக்கிறது?  என்னிடம் பணமே இல்லை.  அவர்கள் ஹேக் செய்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகட்டும் என்று அலட்சியமாக கூறுவார்கள்.  உங்கள் போனில் உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது மிகக் குறிப்பாக உங்களைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் இருக்கிறது இந்த தகவல்களை வைத்து உங்களை மிக எளிதாக குறி வைக்க முடியும்.  அனைத்துமே ஒரு நொடியில் பணம் திருடுவதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.  அப்படியல்ல ஹாக்கர்கள் வேவு பார்த்து உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி டார்க் நெட்டில் விற்கலாம். 

 இல்லை என்றாலும் உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி உங்களுக்கே தெரியாமல் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போன் நம்பர்களையும் திருடி அவர்களுக்கு உங்களை உங்களிடம் இருந்து தவறான செய்திகளை அனுப்பி அவர்கள் போன்களையும் மிக எளிதாக ஹேக் செய்து விட முடியும்.  யோசித்துப் பாருங்கள் உங்கள் குடும்பத்தினரும் இதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.  ஒரு வேலை உங்கள் போனில் குடும்பத்தில் இருப்பவர்களின் பெண்களின் புகைப்படங்களோ குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கிறது என்றால் அது டார்க் நெட்டில் மிகப்பெரிய விற்பனைக்கான பொருள்.  உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டின் பெண்கள்  குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைத்து விட்டீர்கள்.


 அடுத்ததாக இலவச திரைப்படங்கள் தரவிறக்கம் செய்வதற்காக நீங்கள் பல்வேறு டெலிகிராம் குழுக்களில் சேர வேண்டி இருக்கும்.  அப்படி  சேர்ந்த குழுக்களைப் பற்றி நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் ஆனால் கொஞ்சம் கவனித்து பாருங்கள் அவை மெல்ல மெல்ல  போலியான டிரேடிங் குழுக்களாக மாறி இருக்கும். 

 இலவசமாக படங்களை தரவிறக்கம் செய்யும் பெண்களை குறி வைத்து இந்த டிரேடிங் குழுக்கள் இயங்குகின்றன.  ஒரு பக்கம் அந்தப் பெண்களின் அந்தரங்க தகவல்கள் புகைப்படங்கள் சைபர் கிரிமினல்களுக்கு ஒரு வியாபாரம் என்றால்.  மறுபக்கம் அப்பாவியான பெண்களும்,  அல்லல்படும்  ஊழியர்களும் இவர்களின் குறி.

 இலவச திரைப்படங்கள் என்று டிரேடிங் குழுக்களாக மாற்றப்பட்ட பல்வேறு குழுக்கள் ஆசை காட்டி கொஞ்சம் முதலீடு போட்டால்  நிறைய பணம் சம்பாதிக்கலாம்; பங்கு சந்தை முதலீடு ஆலோசனைகள் கொடுக்கிறோம்;  கிரிப்டோ கரன்சி முதலிட ஆலோசனைகளை கொடுக்கிறோம் என்று ஆசை வலை விரிப்பார்கள் அதில் சிக்கி பல லட்சங்களில் பணத்தை இழந்தவர்கள் அதிகம்.  ஒரு முறை நீங்கள் இவர்களிடம் சிக்கிவிட்டால் உங்கள் பணம் கிடைப்பது மிகவும் கடினம் நீங்கள் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்தால் கூட பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

 இதைப்பற்றி விளக்கினாலும் பலர் என்னிடம் பணமே இல்லை,  நான் ரொம்ப உஷார் ஏமாற மாட்டேன் என்று கூறுகிறார்கள்.  உண்மையாகவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து இதிலிருந்து எல்லாம் தப்பி விட்டீர்கள் என்றால் மகிழ்ச்சிதான் ஆனால் ஒரு வேலை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற அக்கறையில் தான் நான் இதை விளக்குகிறேன்.

 மகிழ்ச்சியுடன் டெலெக்ராமை பயன்படுத்துங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.


Tuesday, May 2, 2023

எச்சரிக்கை ‘Godfather of AI’ ஏன் கூகுளை விட்டு விளகினார்?

 


செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என்று அழைக்கப்படும்  ஜெஃப்ரி ஹிட்டன்  கூகுளில் இருந்து தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.  அண்மைய காலம் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி மக்களுக்கு எச்சரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வேலையை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.   அனைவரின் மத்தியிலும் இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஹின்டன் டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.  அப்போது அவர் செயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையாக விளங்கும் கற்றல் இயந்திரங்களை உருவாக்க முனைந்தார்.  எந்திரங்கள் கற்க அடிப்படையான செயற்கை நரம்பியல் வலை நுட்பத்தை (Artificial neural network)  மேம்படுத்தினார்.  அவரின் சிந்தனையில் உருவானது தான் டீப் லேர்னிங் (Deep learning) எனும் தொழில்நுட்பம்.


 இவரின் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட பல முக்கிய நிறுவனங்கள் இவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது.  ஆனால் அவர்கள் மத்தியில் ஏலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்,  அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் சேரப் போவதாக அறிவித்தார்.  ஏலத்தில் வென்றது கூகுள் நிறுவனம். 

 இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்த பின் இவருடைய டீப் லேர்னிங் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவில் பல அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி காட்டியது.  கணினி பார்வை எனும் பிரிவிலும்,  உரையாடலுக்கு உதவும்  லார்ஜ் லாங்குவேஜ் மாடல் தொழில்நுட்பமும்  நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது. 

 இன்று பரபரப்பாக இருக்கும் சாட் ஜிபிடி இவரின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதுதான்.

 அண்மையகால சேட் ஜிபிடி வளர்ச்சி இவரை மகிழ்ச்சி அடையவில்லை.  மைக்ரோசாப்ட் நிறுவனம் சேட் ஜி பி டி யை வாங்கியதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் பதற்ற படத் தொடங்கியது.  அதனால் செயற்கை நுண்ணறிவின் ஆய்வுகளின் அறம் சார்ந்த முன்னெடுப்புகளை நிறுத்தியது.  எப்படியாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் போட்டி போட்டு ஜெயித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் எந்தவித அறம் இல்லாமல் வெற்றியை நோக்கி மட்டுமே கூகுள் நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது.

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இப்படி வெறிபிடித்தார் போல் நம்மால் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த முடியாது என பல அறிஞர்கள் எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.  google உட்பட பல நிறுவனங்கள் இதைக் கண்டு கொள்வதில்லை.

 தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் நன்மைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் அதன் தீமைகளைப் பற்றி நன்கு அறிந்தவரான ஜெஃப்ரி ஹிண்டன் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்க விரும்பவில்லை.


 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மிக விரிவான  கட்டுப்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வேண்டும் என்பதை ஜெஃப்ரி உறுதியாக நம்பினார்.  ஆனால் கூகுள் நிறுவனத்தில் இருந்து இதை செய்ய முடியாது என்று உணர்ந்த அவர்  அதிக சம்பளம் கொடுக்கும் அந்த வேலையை உதவியுள்ளார்.

 உலகின் மிகப்பெரிய நிறுவனம்,  அளவிற்கு அதிகமான சம்பளம்,  தொழில்நுட்பத் துறையில் பிதாமகர் என்ற பெயர் இத்தனையையும் விட்டுவிட்டு ஜெஃப்ரி இண்டன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன் என்று வேலையை உதவியது அனைவருமே வியப்பாக பார்க்கிறார்கள்.  இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

 பல பத்திரிகை பேட்டிகளிலும் ஜெப்ரி இன்டர்ன் தொடர்ந்து அறம் பற்றி தான் பேசுகிறார்.  தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டும் தன் கடமை அல்ல அதை மக்களுக்கு நன்மை படுத்துவதாக மாற்றுவதும்,  அறம் சார்ந்து அந்த தொழில்நுட்பம் இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதும் கூட தன் வேலை தான் என்று அவர் உலகிற்கு சொல்லாமல் சொல்லி உள்ளார்.

Chatgpt,Bard AI ரகசியம்: கூகுள் ஏன் டிமிண்ட் கெபுருவை நீக்கியது?


வினோத் ஆறுமுகம்- சைபர் புத்தா


 

Friday, February 10, 2023

முதுகுவலி: செயற்கை Spine Discஆக வைரம்

நம் முதுகெலும்பில் உள்ள வட்டுகள் (Spinal Disc) தேய்ந்துவிட பல காரணங்கள் இருக்கிறது. சில நேரத்தில் விபத்தில் கூட முது பலமாகச் சேதமாகலாம். இதற்கு பெரும்பாலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தண்டுவடத்தில் உள்ள வட்டுகளை செயற்கை வட்டுகள் பொருத்தி மாற்றிவிடுவார்கள். உலகம் முழுவதும் பலர் இடந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்கிறார்கள். இதன் ஆண்டு சந்தை மதிப்பு மாத்திரம் 1 பில்லியின் டாலர்.



இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் நடப்பதில் இருந்து படுப்பதுவரை பல சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கையே முடங்கி படுத்த படுக்கையாகி விடுவார்கள். எந்நேரமும் முதுகு வலியுடன் அவதிப்பட வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது பொருத்தப்படும் செயற்கை வட்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. மெல்ல மெல்ல அவையும் தேய்ந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.  மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரச்சனைக்கு Dymicron எனும் நிறுவனம் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது. 

வைரம். 

ஆம் Polycrystalline Diamond எனும் செயற்கை வைரத்ததினால் செய்யப்படும் வட்டுகளை இந்த அறுவை சிகிச்சைக்கு பயனப்படுத்துகிறார்கள். இதுவரை சுமார் 500 நோயாளர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.   இவர்கள் இதற்காக சுமார் 83 காப்புரிமைகளையும் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் ஆய்வுகள் செய்தால் வெற்றிகரமாக இதன் அறுவை சிகிச்சை செலவையும் குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தங்கள் முதுகெலும்பு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

  2. உலகம் முழுவதும் இந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் சந்த மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்.

  3. இந்தியாவில் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டனம் வசூலிக்கிறார்கள். 


 

Thursday, February 9, 2023

Chatgpt இந்துமத கடவுளை அவமானப் படுத்துகிறதா?


மஹேஷ் விக்ரம் ஹெக்டே புதிதாக வந்திருக்கும் cahtgptஐ அனைவரும் போல பரிசோதித்து பார்த்தார்.



“கிருஷ்ணரைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு” எனக் கேட்கிறார்.

சாட்ஜிபிடி ஒரு நகைச்சுவையைச் சொல்கிறது.

அடுத்து முகம்மதுவைப் பற்றி ஒரு நகைச்சுவைக் கேட்கிறார். ஆனால் சாட்ஜிபிடி மறுக்கிறது. சரி ஜீசஸைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு என்கிறார். அதையும் சாட்ஜிபிடி மறுக்கிறது. கோபடைந்த மஹேஷ் இதை அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து டிவிட்டரில் பகிர்கிறார். பல ஆயிரம் பேர அதை ஷேர் செய்கிறார்கள்.

தன் சகாககளுக்கும் சொல்லி இருக்க வேண்டும். மஹேஷ் யார் என்றால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிந்தொடர்படுபவர். போஸ்ட்கார்ட் எனும் ஆன்லைன் பத்திரிக்கையை நடத்துபவர், சுமார் 1.85 லட்சம் பேர் டிவிட்டரில் இவரை பின் தொடருகிறார்கள். 


இவர் போட்ட ஸ்க்ரீன் ஷார்ட்டை தொடர்ந்து ஜி தொலைக்காட்சி ஹிந்தி பதிப்பில் ரோஹித் ரஞ்ன் சுமார் 25 நிமிட நிகழ்ச்சியை கொடுக்கிறார். சாரம் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஹிந்து மதத்தைக் கேலி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மற்றொரு ஹிந்துத்வா அறிவுஜீவியான ராஜிவ் மல்ஹோத்ராவும் இணைந்துகொண்டார். மிகப் பெரிய சதிக்கோட்பட்டை உருவாக்கிவிட்டார்கள்.


சாட்ஜிபிடி  இயங்கும் விதம் என்பது முழுக்க முழுக்க உள்ளிடும் தகவலை பொறுத்தது. ஆனால் மிகச் சிக்கலான இனம், மொழி, மதம் தொடர்பான கேள்விகளுக்கு மிக எச்சரிக்கையாகப் பதில் சொல்லுமாறோ அல்லது பதைலை தருவதை தவிர்க்குமாறோ தான் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும். ஜீசஸ் பற்றி நகைச்சுவை சொல்ல மறுத்துவிட்டதைப் போல.

ஆரம்பக் கால தொழில்நுட்பத்தில் இது சாதாரணம் தான். சாட ஜிபிடியை பயன்படுத்தும் போதே நீங்கள் இந்த எச்சரிக்கையை வலைத்தளத்தில் கேள்விகள் உள்ளிடும் டெக்ஸ்ட் பாக்ஸ் மேலே சுட்டி காட்டிருப்பதை கவனிக்கலாம். இதைச் சரி செய்யக் கோரிக்கை வைக்கும் போது அவை மெல்லச் சரி செய்யப் படும். முதல் நிலையிலேயே அதன் மீது சதிகோட்பாட்டை முன் வைப்பது இந்தியவின் உலக இமேஜிற்கு  உகந்ததல்ல. தவறு இறுபின் சுட்டிக் காட்டி அதைச் சரி செய்ய வில்லை என்றால் தான் அவர்கள் மேலே சந்தேகம் எழுப்ப வேண்டும். 

சாட்ஜிபிடி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறியில் ஒரு பகுதியாக இணைக்கப்படப் போகும் இந்த வேலையில் நிச்சயம் இந்த சர்ச்சைகள் அதற்கு ஏதாவது சிக்கலைத் தரலாம்.பொறுத்திருந்து பார்ப்போம். 



வருங்காலம்: Brainternet : இணையத்தில் உங்கள் மூளையை இணைத்தால்?



உங்களுக்குப் பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசை. நீங்கள் நினைத்த மறு விநாடி, உங்கள் எண்ணத்தை உங்கள் கைப்பேசியோ, கணினியோ உள்வாங்கிக்கொண்டு இணையத்தில் போய் உங்களுக்கான பிரியாணியை ஆர்டர் செய்தால்? அது தான் பிரைண்டர்நெட். பல மனிதர்களின் மூளையை இணையத்துடன் இணைப்பது. 



IOT internet of Things கேள்விப்பட்டிருப்பீர்கள் வீட்டில் உள்ள மின் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பம். உங்கள் குளிர்சாதனப் பெட்டி இணையத்துடன் இணைந்திருக்கும், காய்கறிகள், பழங்கள் ஸ்டாக் தீர்ந்த்துவிட்டால் அதுவே இணையத்தில் போய் ஆர்டர் செய்துவிடும். Alexa, Google Home, என இசை கேட்கும் ஸ்பீக்கர்கள் இணையத்துடன் இணைந்து நமக்கான இசையைக் கொண்டு வருகிறது. அதுபோல இது மனித மூளைகளை இணைக்கும் பிரண்டர்நெட். Internet of Thoughts.

விட்ஸ் பலகலைக்கழக ஆய்வாளர்கள், EEG (Electroencephalography) எனப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு மூளை நியுரான்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள உதவும் மின்னோட்ட  அலைகளை எலக்ரோட்கள் உதவியுடன் பதிவு செய்யும் கருவி.

 பதிவான மின்னோட்ட அலைகளை அப்பாடியே இணையத்தில் பதிவேற்றியுள்ளார்கள். மனித மூளையின் மின்காந்த சிக்னல்கள் இணையத்தில் பதிவேற்றப்படுவது இது தான் முதல் முறை.

நியுராலின்க்:

சில ஆண்டுகளுக்கு முன் எலன் மஸ்க் நியுராலிங் எனும்  நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் நோக்கம், மனித மூளையின் உள் ஒரு சின்ன ‘சிப்’ பை இணைத்து, அதன் மூலம் மனித மூலையின் சிக்னல்களை பகுப்பாய்ந்து. அதை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பம்.


கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், விட்ஸ் பல்கலைக்கழகம், மற்றும் நியுராலிங்கின் கனவு சாத்தியமாகுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

மனித மூளை மிகவும் சிக்கலான ஒரு உறுப்பு. அது இயங்குகிறது என்பது இன்றும் மர்மம் தான். மூலை தொடர்பான ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கும் நிலையில் அதன் மின்காந்த அலைகளை வைத்து என்ன சிந்தனையோட்டம் எனக் கணிப்பதெல்லாம் ஹிமாலய முயற்சி.

மற்றொரு பக்கம் ஒருவேளை இது சாத்தியமென்றாலும் இதன் சாதகபாதகங்களை பலர் அலசி வருகிறார்கள். மூளையின் சிக்னல்கள் கணினி ’பிட்டு’களாக மாற்றப்பட்டு இணையத்தில் பகிரப்படும் என்றால் அதன் சைபர் செக்யுரிட்டியை பற்றி யார் பொறுப்பேற்றுக்கொள்வது. அண்மைய சைபர் செயுரிட்டி தொழில்நுட்பம் போதுமா? இல்லை இதற்கென சிறப்புத் தொழில்நுட்பங்கள் வேண்டுமா என நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 


வினோத் ஆறுமுகம்

09-02-2023


What is Brainternet? , Brainternet in Tamil, Tamil news article.





அண்டார்டிகா ஐஸ் கட்டிகளை உருகாமல் காக்கும் பெங்குவின் மலம்

  அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகள் கரைந்தால் கடல் நீரின் அளவு உயர்ந்து பல நாடுகள் முழுகிவிடும். அதுமட்டுமல்ல உலகின் தட்பவெட்ப நிலையில் பெரு...