Showing posts with label india. Show all posts
Showing posts with label india. Show all posts

Monday, April 17, 2023

இந்தியாவில் தாக்கப்படும் வாடகை கார் டிரைவகளும் , உணவு டெலிவரி நபருகளும்



அதிகாலை 2 மணி தன் உபர் காரை எடுத்து வந்து டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் கஸ்டமர் வருகைக்காகக் காத்திருந்தார். குளிர் அவர் முதுகை சில்லிட செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு செங்கல் அவர் முகத்தைப் பதம் பார்த்தது. இரண்டு பேர் திடீரென வந்து தேவியை தாக்கத் தொடங்கினார்கள். அன்றைய நாள் முழுவதும் அவர் ஓட்டி சம்பாதித்த பணத்தை பறித்தனர். தொலைப்பேசியைப் பிடுங்கும் முயற்சியில் அவர் கை உடைந்தது. உபர் நிறுவனத்தின் அவசர உதவிக்குத் தொடர்பு கொண்டார். உபர் நிறுவனம் இரண்டு நாள் கழித்து. தேவி தாக்கப்பட்ட செய்தி பரபரப்பாகிய பின் அந்த எமர்ஜென்சி உதவி அழைப்பிற்கு பதிலளித்தது .

தேவியின் சோக கதையிலிருந்து மீள்வதற்குள் ஐதரபாதில் ரிஸ்வான் என்ற ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் இளைஞர், 23 வயதிருக்கும்.  உணவு டெலிவரி செய்ய மூன்றாம் மாடிக்குச் சென்றார். மாடியில் திறந்துவிட பட்ட நாயிடம் சிக்கிவிட்டார். ஓட வழி இல்லாமல் மேலே இருந்து குதித்துவிட்டார். பலத்த அடி. சில நாட்களில் சிகிச்சையில் இறந்துவிட்டார். அதே நகரில் ஓலா கார் ஓட்டுநருக்கும் வாடிக்கையாளருக்கும் கட்டணத்திற்காக நடந்த வாக்கு வாதத்தில் தாக்கப்பட்ட வெங்கடேஷ் எனும் ஓட்டுநர் கோமாவில் உள்ளார்.


செக்யுரிட்டி, போலிஸ் முதல் கஸ்டமர்கள் வரை தாங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அவமதிக்கப்படுவதாகவும் டிரைவர்கள், டெலிவரி நபர்கள் புகார் கொடுத்தும் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இது போன்ற தாக்குதல்கள் மரணம் வரை செல்கிறது.   

அதுமட்டுமல்ல கஸ்டமர் போல் வண்டியை புக் செய்து தாககி பணம் பறிப்பது, வனடியை திருடுவது. உனவு டெலிவரி செய்ய வருபவர்களை அவமானபடுத்துவது என்பது நடக்கிறது.

உலகம் முழுக்க இவை இருக்கிறது என்றாலும் இந்தியாவில் சாதி மத ரீதியான வெறுப்பும் சேர்ந்துக்கொள்கிறது.ஒரு ஆய்வில் இந்த வேலையில் ஈடுபடும் 3ல் 1 வருவர் இது போன்ற சம்பவங்களை எதிர்க்கொண்டதாக சொல்கிறது.


இந்தியாவில் பல இடங்களில் முஸ்லிம் டெலிவரி ஏஜெண்ட், டிரைவர்கள் என்றால் கஸ்டமர்கள் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். இசுலாமிய டெலிவரி இளைஞர் ஒருவரை வழி மறித்து தாக்கி உணவை எடுத்து சென்றுவிட்டார்கள். போலிஸ் கம்பளைண்ட் கொடுக்கபட்டது அவ்வளவு தான்.

இந்தியாவில் இருக்கும் சில சங்கங்கள் இதை பற்றி குரல் கொடுத்தாலும், நிறுவனங்களிடமிருந்து பெரிய உதவிகள் இல்லை. இவர்கள் தக்காப்பட்டலும் பெரிய இன்சுரன்ஸ் இல்லை. அப்படி இருந்தாலும் இன்சுரன்ஸ் தொகை வாங்குவதற்குள் நிலமை மோசமாகிவிடும்.


இசுலாமிய வெறுப்பு,சாதி ரீதியான அவமானம். தாக்குதல் என்பது இவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. இந்தியாவில் 2023ல் சுமார்  2 கோடி பேர் இந்த சர்வீஸ் வேலையில் ஈட்பட்டுள்ளார்கள். இன்னும் பத்தாண்டுகளில் இது மும்மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவர்களுக்கு அரசு சார்ந்த   பெரிய உதவிகள் இல்லை, போலிஸ் மதிகாது. கஸ்டமர்கள் வெறுப்பார்கள், நிறுவனம் பாதுகாப்பளிப்பதில்லை;. இவை முழுவதும் ஒழுங்கப்படுத்த பட வேண்டும், குறைந்தபட்சம் இவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதற்க்கு.

 





Thursday, February 9, 2023

Chatgpt இந்துமத கடவுளை அவமானப் படுத்துகிறதா?


மஹேஷ் விக்ரம் ஹெக்டே புதிதாக வந்திருக்கும் cahtgptஐ அனைவரும் போல பரிசோதித்து பார்த்தார்.



“கிருஷ்ணரைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு” எனக் கேட்கிறார்.

சாட்ஜிபிடி ஒரு நகைச்சுவையைச் சொல்கிறது.

அடுத்து முகம்மதுவைப் பற்றி ஒரு நகைச்சுவைக் கேட்கிறார். ஆனால் சாட்ஜிபிடி மறுக்கிறது. சரி ஜீசஸைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு என்கிறார். அதையும் சாட்ஜிபிடி மறுக்கிறது. கோபடைந்த மஹேஷ் இதை அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து டிவிட்டரில் பகிர்கிறார். பல ஆயிரம் பேர அதை ஷேர் செய்கிறார்கள்.

தன் சகாககளுக்கும் சொல்லி இருக்க வேண்டும். மஹேஷ் யார் என்றால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிந்தொடர்படுபவர். போஸ்ட்கார்ட் எனும் ஆன்லைன் பத்திரிக்கையை நடத்துபவர், சுமார் 1.85 லட்சம் பேர் டிவிட்டரில் இவரை பின் தொடருகிறார்கள். 


இவர் போட்ட ஸ்க்ரீன் ஷார்ட்டை தொடர்ந்து ஜி தொலைக்காட்சி ஹிந்தி பதிப்பில் ரோஹித் ரஞ்ன் சுமார் 25 நிமிட நிகழ்ச்சியை கொடுக்கிறார். சாரம் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஹிந்து மதத்தைக் கேலி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மற்றொரு ஹிந்துத்வா அறிவுஜீவியான ராஜிவ் மல்ஹோத்ராவும் இணைந்துகொண்டார். மிகப் பெரிய சதிக்கோட்பட்டை உருவாக்கிவிட்டார்கள்.


சாட்ஜிபிடி  இயங்கும் விதம் என்பது முழுக்க முழுக்க உள்ளிடும் தகவலை பொறுத்தது. ஆனால் மிகச் சிக்கலான இனம், மொழி, மதம் தொடர்பான கேள்விகளுக்கு மிக எச்சரிக்கையாகப் பதில் சொல்லுமாறோ அல்லது பதைலை தருவதை தவிர்க்குமாறோ தான் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும். ஜீசஸ் பற்றி நகைச்சுவை சொல்ல மறுத்துவிட்டதைப் போல.

ஆரம்பக் கால தொழில்நுட்பத்தில் இது சாதாரணம் தான். சாட ஜிபிடியை பயன்படுத்தும் போதே நீங்கள் இந்த எச்சரிக்கையை வலைத்தளத்தில் கேள்விகள் உள்ளிடும் டெக்ஸ்ட் பாக்ஸ் மேலே சுட்டி காட்டிருப்பதை கவனிக்கலாம். இதைச் சரி செய்யக் கோரிக்கை வைக்கும் போது அவை மெல்லச் சரி செய்யப் படும். முதல் நிலையிலேயே அதன் மீது சதிகோட்பாட்டை முன் வைப்பது இந்தியவின் உலக இமேஜிற்கு  உகந்ததல்ல. தவறு இறுபின் சுட்டிக் காட்டி அதைச் சரி செய்ய வில்லை என்றால் தான் அவர்கள் மேலே சந்தேகம் எழுப்ப வேண்டும். 

சாட்ஜிபிடி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறியில் ஒரு பகுதியாக இணைக்கப்படப் போகும் இந்த வேலையில் நிச்சயம் இந்த சர்ச்சைகள் அதற்கு ஏதாவது சிக்கலைத் தரலாம்.பொறுத்திருந்து பார்ப்போம். 



அண்டார்டிகா ஐஸ் கட்டிகளை உருகாமல் காக்கும் பெங்குவின் மலம்

  அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் கட்டிகள் கரைந்தால் கடல் நீரின் அளவு உயர்ந்து பல நாடுகள் முழுகிவிடும். அதுமட்டுமல்ல உலகின் தட்பவெட்ப நிலையில் பெரு...