அதிகாலை 2 மணி தன் உபர் காரை எடுத்து வந்து டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் கஸ்டமர் வருகைக்காகக் காத்திருந்தார். குளிர் அவர் முதுகை சில்லிட செய்தது. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு செங்கல் அவர் முகத்தைப் பதம் பார்த்தது. இரண்டு பேர் திடீரென வந்து தேவியை தாக்கத் தொடங்கினார்கள். அன்றைய நாள் முழுவதும் அவர் ஓட்டி சம்பாதித்த பணத்தை பறித்தனர். தொலைப்பேசியைப் பிடுங்கும் முயற்சியில் அவர் கை உடைந்தது. உபர் நிறுவனத்தின் அவசர உதவிக்குத் தொடர்பு கொண்டார். உபர் நிறுவனம் இரண்டு நாள் கழித்து. தேவி தாக்கப்பட்ட செய்தி பரபரப்பாகிய பின் அந்த எமர்ஜென்சி உதவி அழைப்பிற்கு பதிலளித்தது .
தேவியின் சோக கதையிலிருந்து மீள்வதற்குள் ஐதரபாதில் ரிஸ்வான் என்ற ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் இளைஞர், 23 வயதிருக்கும். உணவு டெலிவரி செய்ய மூன்றாம் மாடிக்குச் சென்றார். மாடியில் திறந்துவிட பட்ட நாயிடம் சிக்கிவிட்டார். ஓட வழி இல்லாமல் மேலே இருந்து குதித்துவிட்டார். பலத்த அடி. சில நாட்களில் சிகிச்சையில் இறந்துவிட்டார். அதே நகரில் ஓலா கார் ஓட்டுநருக்கும் வாடிக்கையாளருக்கும் கட்டணத்திற்காக நடந்த வாக்கு வாதத்தில் தாக்கப்பட்ட வெங்கடேஷ் எனும் ஓட்டுநர் கோமாவில் உள்ளார்.
செக்யுரிட்டி, போலிஸ் முதல் கஸ்டமர்கள் வரை தாங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அவமதிக்கப்படுவதாகவும் டிரைவர்கள், டெலிவரி நபர்கள் புகார் கொடுத்தும் யாரும் கண்டுக்கொள்வதில்லை. இது போன்ற தாக்குதல்கள் மரணம் வரை செல்கிறது.
அதுமட்டுமல்ல கஸ்டமர் போல் வண்டியை புக் செய்து தாககி பணம் பறிப்பது, வனடியை திருடுவது. உனவு டெலிவரி செய்ய வருபவர்களை அவமானபடுத்துவது என்பது நடக்கிறது.
உலகம் முழுக்க இவை இருக்கிறது என்றாலும் இந்தியாவில் சாதி மத ரீதியான வெறுப்பும் சேர்ந்துக்கொள்கிறது.ஒரு ஆய்வில் இந்த வேலையில் ஈடுபடும் 3ல் 1 வருவர் இது போன்ற சம்பவங்களை எதிர்க்கொண்டதாக சொல்கிறது.
இந்தியாவில் பல இடங்களில் முஸ்லிம் டெலிவரி ஏஜெண்ட், டிரைவர்கள் என்றால் கஸ்டமர்கள் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். இசுலாமிய டெலிவரி இளைஞர் ஒருவரை வழி மறித்து தாக்கி உணவை எடுத்து சென்றுவிட்டார்கள். போலிஸ் கம்பளைண்ட் கொடுக்கபட்டது அவ்வளவு தான்.
இந்தியாவில் இருக்கும் சில சங்கங்கள் இதை பற்றி குரல் கொடுத்தாலும், நிறுவனங்களிடமிருந்து பெரிய உதவிகள் இல்லை. இவர்கள் தக்காப்பட்டலும் பெரிய இன்சுரன்ஸ் இல்லை. அப்படி இருந்தாலும் இன்சுரன்ஸ் தொகை வாங்குவதற்குள் நிலமை மோசமாகிவிடும்.
இசுலாமிய வெறுப்பு,சாதி ரீதியான அவமானம். தாக்குதல் என்பது இவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. இந்தியாவில் 2023ல் சுமார் 2 கோடி பேர் இந்த சர்வீஸ் வேலையில் ஈட்பட்டுள்ளார்கள். இன்னும் பத்தாண்டுகளில் இது மும்மடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுக்கு அரசு சார்ந்த பெரிய உதவிகள் இல்லை, போலிஸ் மதிகாது. கஸ்டமர்கள் வெறுப்பார்கள், நிறுவனம் பாதுகாப்பளிப்பதில்லை;. இவை முழுவதும் ஒழுங்கப்படுத்த பட வேண்டும், குறைந்தபட்சம் இவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுவதற்க்கு.
No comments:
Post a Comment