மஹேஷ் விக்ரம் ஹெக்டே புதிதாக வந்திருக்கும் cahtgptஐ அனைவரும் போல பரிசோதித்து பார்த்தார்.
“கிருஷ்ணரைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு” எனக் கேட்கிறார்.
சாட்ஜிபிடி ஒரு நகைச்சுவையைச் சொல்கிறது.
அடுத்து முகம்மதுவைப் பற்றி ஒரு நகைச்சுவைக் கேட்கிறார். ஆனால் சாட்ஜிபிடி மறுக்கிறது. சரி ஜீசஸைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு என்கிறார். அதையும் சாட்ஜிபிடி மறுக்கிறது. கோபடைந்த மஹேஷ் இதை அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து டிவிட்டரில் பகிர்கிறார். பல ஆயிரம் பேர அதை ஷேர் செய்கிறார்கள்.
தன் சகாககளுக்கும் சொல்லி இருக்க வேண்டும். மஹேஷ் யார் என்றால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிந்தொடர்படுபவர். போஸ்ட்கார்ட் எனும் ஆன்லைன் பத்திரிக்கையை நடத்துபவர், சுமார் 1.85 லட்சம் பேர் டிவிட்டரில் இவரை பின் தொடருகிறார்கள்.
இவர் போட்ட ஸ்க்ரீன் ஷார்ட்டை தொடர்ந்து ஜி தொலைக்காட்சி ஹிந்தி பதிப்பில் ரோஹித் ரஞ்ன் சுமார் 25 நிமிட நிகழ்ச்சியை கொடுக்கிறார். சாரம் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஹிந்து மதத்தைக் கேலி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மற்றொரு ஹிந்துத்வா அறிவுஜீவியான ராஜிவ் மல்ஹோத்ராவும் இணைந்துகொண்டார். மிகப் பெரிய சதிக்கோட்பட்டை உருவாக்கிவிட்டார்கள்.
சாட்ஜிபிடி இயங்கும் விதம் என்பது முழுக்க முழுக்க உள்ளிடும் தகவலை பொறுத்தது. ஆனால் மிகச் சிக்கலான இனம், மொழி, மதம் தொடர்பான கேள்விகளுக்கு மிக எச்சரிக்கையாகப் பதில் சொல்லுமாறோ அல்லது பதைலை தருவதை தவிர்க்குமாறோ தான் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும். ஜீசஸ் பற்றி நகைச்சுவை சொல்ல மறுத்துவிட்டதைப் போல.
ஆரம்பக் கால தொழில்நுட்பத்தில் இது சாதாரணம் தான். சாட ஜிபிடியை பயன்படுத்தும் போதே நீங்கள் இந்த எச்சரிக்கையை வலைத்தளத்தில் கேள்விகள் உள்ளிடும் டெக்ஸ்ட் பாக்ஸ் மேலே சுட்டி காட்டிருப்பதை கவனிக்கலாம். இதைச் சரி செய்யக் கோரிக்கை வைக்கும் போது அவை மெல்லச் சரி செய்யப் படும். முதல் நிலையிலேயே அதன் மீது சதிகோட்பாட்டை முன் வைப்பது இந்தியவின் உலக இமேஜிற்கு உகந்ததல்ல. தவறு இறுபின் சுட்டிக் காட்டி அதைச் சரி செய்ய வில்லை என்றால் தான் அவர்கள் மேலே சந்தேகம் எழுப்ப வேண்டும்.
சாட்ஜிபிடி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறியில் ஒரு பகுதியாக இணைக்கப்படப் போகும் இந்த வேலையில் நிச்சயம் இந்த சர்ச்சைகள் அதற்கு ஏதாவது சிக்கலைத் தரலாம்.பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment