Thursday, February 9, 2023

வருங்காலம்: Brainternet : இணையத்தில் உங்கள் மூளையை இணைத்தால்?



உங்களுக்குப் பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசை. நீங்கள் நினைத்த மறு விநாடி, உங்கள் எண்ணத்தை உங்கள் கைப்பேசியோ, கணினியோ உள்வாங்கிக்கொண்டு இணையத்தில் போய் உங்களுக்கான பிரியாணியை ஆர்டர் செய்தால்? அது தான் பிரைண்டர்நெட். பல மனிதர்களின் மூளையை இணையத்துடன் இணைப்பது. 



IOT internet of Things கேள்விப்பட்டிருப்பீர்கள் வீட்டில் உள்ள மின் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பம். உங்கள் குளிர்சாதனப் பெட்டி இணையத்துடன் இணைந்திருக்கும், காய்கறிகள், பழங்கள் ஸ்டாக் தீர்ந்த்துவிட்டால் அதுவே இணையத்தில் போய் ஆர்டர் செய்துவிடும். Alexa, Google Home, என இசை கேட்கும் ஸ்பீக்கர்கள் இணையத்துடன் இணைந்து நமக்கான இசையைக் கொண்டு வருகிறது. அதுபோல இது மனித மூளைகளை இணைக்கும் பிரண்டர்நெட். Internet of Thoughts.

விட்ஸ் பலகலைக்கழக ஆய்வாளர்கள், EEG (Electroencephalography) எனப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு மூளை நியுரான்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள உதவும் மின்னோட்ட  அலைகளை எலக்ரோட்கள் உதவியுடன் பதிவு செய்யும் கருவி.

 பதிவான மின்னோட்ட அலைகளை அப்பாடியே இணையத்தில் பதிவேற்றியுள்ளார்கள். மனித மூளையின் மின்காந்த சிக்னல்கள் இணையத்தில் பதிவேற்றப்படுவது இது தான் முதல் முறை.

நியுராலின்க்:

சில ஆண்டுகளுக்கு முன் எலன் மஸ்க் நியுராலிங் எனும்  நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் நோக்கம், மனித மூளையின் உள் ஒரு சின்ன ‘சிப்’ பை இணைத்து, அதன் மூலம் மனித மூலையின் சிக்னல்களை பகுப்பாய்ந்து. அதை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பம்.


கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், விட்ஸ் பல்கலைக்கழகம், மற்றும் நியுராலிங்கின் கனவு சாத்தியமாகுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

மனித மூளை மிகவும் சிக்கலான ஒரு உறுப்பு. அது இயங்குகிறது என்பது இன்றும் மர்மம் தான். மூலை தொடர்பான ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கும் நிலையில் அதன் மின்காந்த அலைகளை வைத்து என்ன சிந்தனையோட்டம் எனக் கணிப்பதெல்லாம் ஹிமாலய முயற்சி.

மற்றொரு பக்கம் ஒருவேளை இது சாத்தியமென்றாலும் இதன் சாதகபாதகங்களை பலர் அலசி வருகிறார்கள். மூளையின் சிக்னல்கள் கணினி ’பிட்டு’களாக மாற்றப்பட்டு இணையத்தில் பகிரப்படும் என்றால் அதன் சைபர் செக்யுரிட்டியை பற்றி யார் பொறுப்பேற்றுக்கொள்வது. அண்மைய சைபர் செயுரிட்டி தொழில்நுட்பம் போதுமா? இல்லை இதற்கென சிறப்புத் தொழில்நுட்பங்கள் வேண்டுமா என நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 


வினோத் ஆறுமுகம்

09-02-2023


What is Brainternet? , Brainternet in Tamil, Tamil news article.





No comments:

Post a Comment

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

  ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக...