செயற்கை நுண்ணறிவின் பிதாமகர் என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிட்டன் கூகுளில் இருந்து தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அண்மைய காலம் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி மக்களுக்கு எச்சரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன் வேலையை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார். அனைவரின் மத்தியிலும் இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 15 வருடங்களுக்கு முன்பு ஹின்டன் டொரன்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் செயற்கை நுண்ணறிவுக்கு அடிப்படையாக விளங்கும் கற்றல் இயந்திரங்களை உருவாக்க முனைந்தார். எந்திரங்கள் கற்க அடிப்படையான செயற்கை நரம்பியல் வலை நுட்பத்தை (Artificial neural network) மேம்படுத்தினார். அவரின் சிந்தனையில் உருவானது தான் டீப் லேர்னிங் (Deep learning) எனும் தொழில்நுட்பம்.
இவரின் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட பல முக்கிய நிறுவனங்கள் இவரை வேலைக்கு எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியது. ஆனால் அவர்கள் மத்தியில் ஏலம் ஒன்றை ஏற்பாடு செய்தார், அதிகம் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் சேரப் போவதாக அறிவித்தார். ஏலத்தில் வென்றது கூகுள் நிறுவனம்.
இவர் கூகுள் நிறுவனத்தில் இணைந்த பின் இவருடைய டீப் லேர்னிங் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவில் பல அசாத்திய சாதனைகளை நிகழ்த்தி காட்டியது. கணினி பார்வை எனும் பிரிவிலும், உரையாடலுக்கு உதவும் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் தொழில்நுட்பமும் நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறியது.
இன்று பரபரப்பாக இருக்கும் சாட் ஜிபிடி இவரின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியதுதான்.
அண்மையகால சேட் ஜிபிடி வளர்ச்சி இவரை மகிழ்ச்சி அடையவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனம் சேட் ஜி பி டி யை வாங்கியதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் பதற்ற படத் தொடங்கியது. அதனால் செயற்கை நுண்ணறிவின் ஆய்வுகளின் அறம் சார்ந்த முன்னெடுப்புகளை நிறுத்தியது. எப்படியாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் போட்டி போட்டு ஜெயித்து விட வேண்டும் என்கிற முனைப்பில் எந்தவித அறம் இல்லாமல் வெற்றியை நோக்கி மட்டுமே கூகுள் நிறுவனம் சென்று கொண்டிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இப்படி வெறிபிடித்தார் போல் நம்மால் சமூகத்திற்கு அறிமுகப்படுத்த முடியாது என பல அறிஞர்கள் எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார்கள். google உட்பட பல நிறுவனங்கள் இதைக் கண்டு கொள்வதில்லை.
தான் உருவாக்கிய தொழில்நுட்பத்தின் நன்மைகள் மட்டுமல்ல எதிர்காலத்தில் அதன் தீமைகளைப் பற்றி நன்கு அறிந்தவரான ஜெஃப்ரி ஹிண்டன் கண்களை மூடிக்கொண்டு சும்மா இருக்க விரும்பவில்லை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மிக விரிவான கட்டுப்பாடுகள் மற்றும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வும் வேண்டும் என்பதை ஜெஃப்ரி உறுதியாக நம்பினார். ஆனால் கூகுள் நிறுவனத்தில் இருந்து இதை செய்ய முடியாது என்று உணர்ந்த அவர் அதிக சம்பளம் கொடுக்கும் அந்த வேலையை உதவியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய நிறுவனம், அளவிற்கு அதிகமான சம்பளம், தொழில்நுட்பத் துறையில் பிதாமகர் என்ற பெயர் இத்தனையையும் விட்டுவிட்டு ஜெஃப்ரி இண்டன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன் என்று வேலையை உதவியது அனைவருமே வியப்பாக பார்க்கிறார்கள். இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பல பத்திரிகை பேட்டிகளிலும் ஜெப்ரி இன்டர்ன் தொடர்ந்து அறம் பற்றி தான் பேசுகிறார். தொழில்நுட்பத்தை உருவாக்குவது மட்டும் தன் கடமை அல்ல அதை மக்களுக்கு நன்மை படுத்துவதாக மாற்றுவதும், அறம் சார்ந்து அந்த தொழில்நுட்பம் இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதும் கூட தன் வேலை தான் என்று அவர் உலகிற்கு சொல்லாமல் சொல்லி உள்ளார்.
Chatgpt,Bard AI ரகசியம்: கூகுள் ஏன் டிமிண்ட் கெபுருவை நீக்கியது?
வினோத் ஆறுமுகம்- சைபர் புத்தா
No comments:
Post a Comment