Telegram இல் உங்களுக்கு ஏன் ஒருவர் இலவசமாக படங்களை கொடுக்க வேண்டும்? ஒரு படத்திற்கு டிக்கெட் செலவு ஆகக்கூடாது, ஒரு ஓடிடிக்கு சப்ஸ்கிரைப் பணம் கொடுக்க வேண்டாம் என்று நீங்களே பணத்தை மிச்சம் பிடிக்க telegramல் படத்தை டவுன்லோடு செய்கிறீர்கள். உங்களுக்கு பணம் மீது எவ்வளவு அக்கறை இருக்கும்போது உங்களுக்கு இலவசமாக கொடுப்பவர் மட்டும் சமூக சேவையா செய்வார்?
டெலிகிராமில் படங்களை தரவிறக்கம் செய்வதிலும் பலவிதமான பாட்களை அதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளது அதைப்பற்றி நாம் தெரிந்து கொண்டு எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
telegram என்பது இன்று பலராலும் பயன்படுத்தப்படும் சேட் ஆப். உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. தகவல் பரிமாற்றத்திற்கும் கருத்து சுதந்திரத்திற்கும் மிக முக்கியமான செயல் இது என பலர் நினைக்கிறார்கள். ஆனால் டெலிகிராமில் எதிர்பாராத விதமாக ஒரு முழு திரைப்படத்தையும் பகிரும் அளவு வசதிகள் உள்ளது. இதனால் விரைவிலேயே டெலெக்ராம் செயலி என்பது இலவசமாக புதிய படங்களை தரவிறக்க பயன்படுத்தப்பட்டது.
தமிழ் ராக்கர்ஸ் அடுத்தபடியாக இன்று டெலிகிராமில் உலகம் முழுவதும் உள்ள படங்கள் மற்றும் ஓடிடி களில் வெளிவரும் வெப் சீரியஸ்கள் பகிரப்பட்டும் தரவிறக்கப்பட்டும் வருகிறது இதற்காக யாரும் பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.
ஆனால் இதற்கு ஒரு மறுபக்கம் உள்ளது.
இந்த இலவச படங்களின் மூலம் சைபர் கிரிமினல்கள் ஏற்கனவே உங்கள் ஃபோன்களிலும் லேப்டாப் களிலும் நுழைந்து விட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
சைபர் கிரிமினல்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒரு போன் உள்ளும் லேப்டாப் உள்ளும் நுழைவது மிகவும் கடினமான ஒரு செயல் அப்படி அவர்கள் நுழைந்து விட்டால் உடனடியாகவோ அல்லது பல நாட்கள் உங்கள் பூனை வேவு பார்ப்பதின் பல லாபங்கள் உண்டு.
நேரடியாக உங்கள் பணத்தை திருடுவது.
உங்களைப் பற்றிய தகவல்களைத் திருடி அதை டார்க் நெட்டில் விற்பதின் மூலம் பணம் பார்ப்பது.
உங்களை மெல்ல வேவு பார்ப்பது.
உங்களை ஏமாற்றி தவறான விஷயங்களில் முதலீடு செய்ய வைப்பது.
ரான்சம்வேர் எனும் முறையில் உங்கள் போனை முடக்கி பணயமாக பணம் கேட்பது.
மேலே நாம் பார்த்த சைபர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் மால் பெயர்களை உங்கள் போனில் செலுத்த வேண்டும். மால் வேர்களை லிங்க் மூலம் அனுப்பி நீங்கள் கிளிக் செய்தால் தான் அந்த மால்வர் உங்கள் போன் அல்லது லேப்டாப்பில் நுழையும். அவ்வளவு எளிதாக நீங்கள் கிளிக் செய்து விட மாட்டீர்கள். ஒருவரை அந்த கிளிக் செய்ய வைக்க சைபர் கிரிமினல்கள் பல உளவியல் வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.
ஆனால் இந்த இலவச திரைப்படங்கள் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல.
இதை நீங்கள் புரிந்து கொள்ள சைபர் கிரைமில் இரண்டு விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்,
Malware Bundling
Malvertising
Malware Bundling: இந்த முறையில் மால்வேர்களை உண்மையான அப்ளிகேஷன் ஓடும் அல்லது திரைப்படம் பாடல்களோடும் இணைத்து சேர்த்து விடுவார்கள். இதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடலையும் படத்தையும் தரவிருக்கும் போது அதனுடனே மாபெரும் உங்கள் லேப்டாப் அல்லது ஃபோனில் டவுன்லோட் ஆகிவிடும்.
ஒரு மால்வேர் என்பது தீங்கான செயலி. அது உள்ளே வந்து விட்டால் போதும் உங்கள் ஒப்புதலுக்காக காத்திருக்காது நேரடியாக போய் உங்கள் போனை அடிமட்டம் வரை ஹேக் செய்து விடும்.
Malvertising: Telegramல் படம் டவுன்லோட் செய்த அனைவருமே இந்த Malvertisingஐ பார்த்திருப்பீர்கள். தீங்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அட்வர்டைஸ்மென்ட் பக்கம் தான் Malvertising page. Malvertising என்றால் malicious advertising என பொருள்.
நீங்கள் படத்தை டவுன்லோட் செய்யும் பக்கத்தில் “DOWNLOAD” என்ற வார்த்தை அல்லது பட்டன்கள் பல இருக்கும் அதில் தெரியாமல் நீங்கள் ஒரு டவுன்லோட் பட்டனை அழுத்தி விட்டால் உங்களுக்கே தெரியாமல் தீங்கான செயலி உங்கள் போனுக்குள் நுழைந்து விடும். நிற்க இப்போதெல்லாம் இந்த பக்கத்தை நீங்கள் திறந்தாலே அந்த நொடியில் தீங்கான செயலிகள் உங்கள் போனுக்குள் நுழைந்து உங்கள் போனை ஹேக் செய்து இருக்கும்.
இதைப்பற்றி நான் விளக்கும் போது பலரும் என் போனில் என்ன இருக்கிறது? என்னிடம் பணமே இல்லை. அவர்கள் ஹேக் செய்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு போகட்டும் என்று அலட்சியமாக கூறுவார்கள். உங்கள் போனில் உங்களைப் பற்றிய தகவல்கள் இருக்கிறது மிகக் குறிப்பாக உங்களைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் இருக்கிறது இந்த தகவல்களை வைத்து உங்களை மிக எளிதாக குறி வைக்க முடியும். அனைத்துமே ஒரு நொடியில் பணம் திருடுவதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறார்கள். அப்படியல்ல ஹாக்கர்கள் வேவு பார்த்து உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி டார்க் நெட்டில் விற்கலாம்.
இல்லை என்றாலும் உங்களைப் பற்றிய தகவல்களை திரட்டி உங்களுக்கே தெரியாமல் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் போன் நம்பர்களையும் திருடி அவர்களுக்கு உங்களை உங்களிடம் இருந்து தவறான செய்திகளை அனுப்பி அவர்கள் போன்களையும் மிக எளிதாக ஹேக் செய்து விட முடியும். யோசித்துப் பாருங்கள் உங்கள் குடும்பத்தினரும் இதில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேலை உங்கள் போனில் குடும்பத்தில் இருப்பவர்களின் பெண்களின் புகைப்படங்களோ குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கிறது என்றால் அது டார்க் நெட்டில் மிகப்பெரிய விற்பனைக்கான பொருள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் வீட்டின் பெண்கள் குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைத்து விட்டீர்கள்.
அடுத்ததாக இலவச திரைப்படங்கள் தரவிறக்கம் செய்வதற்காக நீங்கள் பல்வேறு டெலிகிராம் குழுக்களில் சேர வேண்டி இருக்கும். அப்படி சேர்ந்த குழுக்களைப் பற்றி நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கலாம் ஆனால் கொஞ்சம் கவனித்து பாருங்கள் அவை மெல்ல மெல்ல போலியான டிரேடிங் குழுக்களாக மாறி இருக்கும்.
இலவசமாக படங்களை தரவிறக்கம் செய்யும் பெண்களை குறி வைத்து இந்த டிரேடிங் குழுக்கள் இயங்குகின்றன. ஒரு பக்கம் அந்தப் பெண்களின் அந்தரங்க தகவல்கள் புகைப்படங்கள் சைபர் கிரிமினல்களுக்கு ஒரு வியாபாரம் என்றால். மறுபக்கம் அப்பாவியான பெண்களும், அல்லல்படும் ஊழியர்களும் இவர்களின் குறி.
இலவச திரைப்படங்கள் என்று டிரேடிங் குழுக்களாக மாற்றப்பட்ட பல்வேறு குழுக்கள் ஆசை காட்டி கொஞ்சம் முதலீடு போட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்; பங்கு சந்தை முதலீடு ஆலோசனைகள் கொடுக்கிறோம்; கிரிப்டோ கரன்சி முதலிட ஆலோசனைகளை கொடுக்கிறோம் என்று ஆசை வலை விரிப்பார்கள் அதில் சிக்கி பல லட்சங்களில் பணத்தை இழந்தவர்கள் அதிகம். ஒரு முறை நீங்கள் இவர்களிடம் சிக்கிவிட்டால் உங்கள் பணம் கிடைப்பது மிகவும் கடினம் நீங்கள் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்தால் கூட பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இதைப்பற்றி விளக்கினாலும் பலர் என்னிடம் பணமே இல்லை, நான் ரொம்ப உஷார் ஏமாற மாட்டேன் என்று கூறுகிறார்கள். உண்மையாகவே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து இதிலிருந்து எல்லாம் தப்பி விட்டீர்கள் என்றால் மகிழ்ச்சிதான் ஆனால் ஒரு வேலை உங்களுக்கே தெரியாமல் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற அக்கறையில் தான் நான் இதை விளக்குகிறேன்.
மகிழ்ச்சியுடன் டெலெக்ராமை பயன்படுத்துங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
No comments:
Post a Comment