பூமியின் கால் பாகம் நிலம் என்றால் முக்கால் பாகம் கடல் தான். கடல் தண்ணீர். இந்த கடல் தண்ணீருக்குள் தொடர்புகொள்ளத் தேவை இருக்கிறது, கடலை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.காரணம்,
கடலில் உள்ள உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ள. கடலை ஆய்வு செய்ய.
கடல் அடியில் உள்ள எரிமலைகளை ஆய்வு செய்ய.
கடல் ஏற்படு சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து கட்டுப்படுத்தக்
கடலில் புதைந்த போன நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்ய,
கடலில் புதைந்துள்ள இயற்கை வளங்கள், கனிம வளங்களை மனிதன் பயன்படுத்த.
ராணுவ கண்காணிப்பு செய்ய
எனக் காரணங்கள் அதிகம். மண்ணில் இண்டர்நெட் தொழில்நுட்பம் பல அசாத்தியங்களை நிகழ்த்தியுள்ள நிலையில், அது போன்ற தங்கு தடையின்றி ஒரு வையர்லெஸ் இண்டர்நெட் கடலுக்குள் அமைந்தால் கடலை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம், கடலின் மர்மங்களை தெரிந்துக்கொண்டுவிடலாம்.
நிலத்தில் இண்டர்நெட் என்பது ஆப்டிகள் பைபர் கேபிள்,விண்வெளியில் சாட்டிலைட்கள், காற்றில் மைக்ரோ வேவ் என்ற மூன்று தொழில்நுட்பங்கள் உதவியுடன் வைர்லெஸ் இண்டர்நெட்டை சாத்திய படுத்தியுள்ளோம். இதில் கவனிக்க வேண்டியது உலக இண்டர்நெட்டை சாத்தியப்படுத்தும் ஆப்டிகள் பைபர் கேபிள்கள் கடலுக்கடியில் தான் செல்கிறது. அந்த கேபிள்களை கண்காணிக்கவும் நமக்கு கடலுக்கடியில் ஒரு தொடர்பு அமைப்பு தேவைப் படுகிறது,.
கடலுக்கடியில் தொடர்பு அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள முதல் சிக்கல். கடல் முழுவதும் ஆப்டிகள் கேபிள் போட முடியாது. சாத்தியமில்லை. காற்றும் இல்லை. சாட்டிலைட்டும் உதவாது. நிலத்தில் உதவும் தகவல் தொடர்பு முறை தண்ணீருக்குள் வேலை செய்யாது.
கடல் தண்ணீருக்குள் தொடர்பு கொள்ள புதிய தொழில்நுட்பம் தேவை அது தான் Underwate Wireless Sensor network.
இந்த Underwater Wireless Sensor network சுருக்கமாக UWSN பல் சென்சார் எந்திரங்களைக் கொண்டு அதிக அதிர்வுகள் கொண்ட மைக்ரோவேவ்களை அருகில் இருக்கும் அடுத்த சென்சார் எந்திரத்திற்குச் செலுத்தும்,அதைப் பெற்றுக்கொள்ளும் ஒரு மோடம் அடுத்த எந்திரத்திற்குத் தகவல் அனுப்பும். அப்படியே கடலுக்கு மேலே உள்ள எந்திரத்திற்கு தகவல் கிடைத்தவுடன் அதை அருகில் இருக்கும் கண்காணிப்பு மையத்திற்கு எளிதாக ஆனுப்பிவிடும்.
கடலுக்குக்கடியில் கடலின் தட்பவெப்ப நிலை, அதன் பண்புகள், மாற்றங்கள் எனப் பல தகவல்களை இந்த சென்சார்கள் சேகரித்துக்கொண்டே இருக்கும்.
ஆனாலும் இதில் பல சிக்கல். கடலுக்கடியில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் இந்த தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றவாறு கண்காணித்து எந்திரங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இது மனிதர்களாக மட்டும் செய்ய முடியாது. ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை சில நூறு சென்ஸார்கள் என்றால் சாத்தியமே இல்லை.
இந்த சிக்கல் தான் இத்தாலியில் இருக்கும் அகழ்வாராய்ச்சி தலத்திற்கும் வந்தது. இத்தாலியில் உள்ள ’பேயீ’ நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமான கடற்கரை உல்லாச விடுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். மார்க் ஆண்டனி முதல் ஜூலியஸ் சீசர் வரை பொழுதுபோக்கிற்காக இங்கே வந்து உல்லாசமாக இருந்த நகரம். கடலக்கடியில் மூழ்கிவிட்டது. பிற்காலத்தில் கடலுக்கடியில் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி தளமாக மாறிவிட்டது. UWSN மூலம் ஆரம்பக்காலத்தில் ஒரளவு பணிகள் சிறப்பாக நடந்தாலும் இதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல் தலைவலியாகவே இருந்தது. இதற்குத் தீர்வு காண சபீன்ஸா பல்கலைக்கழகத்தில் தலைமை ஆய்வாளர் சிஹிராபெட்ரோலி முனைந்தார். அவர் ஆய்வுக் குழுவுடன் பல தீர்வுகளை பரிசோதித்துப் பார்த்தார்கள். அதில் ஒன்று AI உதவியுடன் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். மனிதர்களின் சாத்தியமில்ல தொடர்பமைப்பின் மாற்றங்களைத் தொடர்ந்து கடலை கண்காணித்து அதன் அடிப்படையில் செய்யும் ஏ.ஐ. மென்பொருளை உருவாக்கினார்கள். மிகவும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ வசதியுடனான ஒரு UWSN வடிவமைத்து சோத்தி பார்த்தார்கள். வெற்றி.
இதை W-Sense என்றழைக்கிறார்கள். இதன் உண்மையான தொழில்நுட்ப அமைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, காப்புரிமைக்குக் காத்திருப்பதால் வெளியிடவில்லை. ஆனால் பரிசோதனையாக பேயீ அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது.
ஆகாயம், காற்று, நிலம் இப்போது நீர் வரை வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை மனிதன் உருவாக்கிவிட்டன. இதனால் பல இயற்கை பேரிடர்களைக் கண்காணிக்க முடியும். நெருப்பின் உதவியுடன் ஒரு வையர்லெஸ் தகவல் தொடர்பமைப்பை மனிதன் உருவாக்கிவிட்டால் போதும்..
பின்குறிப்பு:
இந்த கட்டுரையில் UWSN பற்றிய மிக அடிப்படை தொழில்நுட்ப தகவல் புரிதலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது இது முழுமையான தொழில்நுட்ப விளக்கமல்ல..
No comments:
Post a Comment