அறிவியல் துணைகொண்டு மரணத்தை வெல்ல முடியுமா? இது தான் உலகின் சூப்பர் பணக்காரர்களின் ஒரே கேள்வி, தேடல். எவ்வளவு பணம் இருந்து என்ன பயன், வயதாகி, மூப்பு வருகிறதே? ஒருநாள் செத்துப் போய்விடுமே என்ற கவலை. அதற்குத் தீர்வு தேடும் ஒரு மாநாடு தான் Longevity Investors Conference.
Longevity என்றால் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தால், மரணத்தை முழுமையாக வெல்ல முடியுமா எனத் தெரியவில்லை, குறைந்தபட்சம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடலாம் தானே? ஆனால் இந்த Longevity Investors Conference சுருக்கமாக LI மாநாடு என்பது வெறும் வாழ்வை நீட்டிப்பது மட்டுமல்ல, வயதாகி மூப்பு வருகிறதே அதை வெல்லவும் தான். இதை Anti Aging என்பார்கள். அதுமட்டுமல்ல வாழும்போதே புத்துணர்ச்சியுடன் இருக்க Rejuvenating Tech.
இந்த மாநாட்டின் நோக்கமே, மேலே நாம் பார்த்த மூன்று துறைகளில் என்ன ஆய்வுகள் நடக்கின்றன, யாருக்கு முதலீடுகள் தேவை, வருங்காலத்தில் என்ன புது ஆய்வுகள் வரப்போகிறது போன்றவற்றின் தகவல் கிடைக்கும்.
உலகின் முதன்மை பயோடெக் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரும் பணக்காரர்கள் கலந்துகொண்டு விவாதிப்பார்கள். நீங்கள் பணக்காரர்களின் மனதை வென்றால் முதலீடுகள் கிடைக்கும்.
மாநாட்டில் பல நம்பகமான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈஸ்ட் பாக்டீரியா முதல் சில நுண்ணுயிரிகளின் வயதை வெற்றிகரமாகப் பரிசோதனையில் நீட்டியிருந்தார்கள். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் சில வித நொயெதிர்ப்பு-குறைப்பு மருந்துகள் வெற்றிகரமாக ஆயுளை நீட்டிக்க உதவுவதாகக் கூறினார்கள் (25% சதவீதம் தான் அந்த வெற்றி). சில எலிகளுக்கு மனித பதின்வயது இளைஞர்களின் ரத்தம் கொடுத்து ஆய்வு செய்தபோதும், சில நம்பகமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள் மேலும் விலங்குகள் மனிதர்கள் என்று விரிவடைய வேண்டும். இன்னொரு பக்கம் நன்றாக உடற்பயிற்சி செய்து தசைகளை பலமாக்குங்கள் புத்துணர்ச்சிக்கும், மரணத்தைத் தள்ளிப் போட உதவும் போன்ற ஆய்வு முடிவுகளும் இருந்தது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டிக்கெட் விலை வெறும் 8 லட்ச ரூபாய் தான், அப்படி நீங்கள் கட்ட தயாராக இருந்தாலும் அவர்கள் கவனமாகத் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். புத்துணர்ச்சி அளிக்கும் பானங்கள் , உணவுகள் விருந்திலிருந்தது. உணவின் ருசி வேற லெவல் என்று அதில் கலந்துகொண்ட புட் ப்லாகர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன்.
விருப்பமிருந்தால் கலந்துகொள்ளவும் : https://www.longevityinvestors.ch/
No comments:
Post a Comment