Monday, February 6, 2023

இறந்தவர்களுடன் பேச ஒரு தொழில்நுட்பம்.. ஆனால்

 இறந்தவர்களுடன் பேச ஒரு தொழில்நுட்பம்.. ஆனால்


மனித வாழ்வில் இறப்பு என்பது தவிர்க முடியாத ஒன்று அதன் பிரிவு ஏற்படுத்தும் துன்பம் வலிமிகுந்தது. ஒருவேளை இறந்த பின்னும் ஒருவருடன் தொடர்பு கொள்ள முடிந்தால்? 


ஆவிகளுடன் பேசுவதைப் பற்றி நான் சொல்லவில்லை. உண்மையாக, தொழில்நுட்ப உதவியுடன்.. அறிவியல் உதவியுடன். 


நீங்கள் Chatgpt பற்றி கேள்விப்பட்டிருக்கலாம், ஆர்டிபீஷியல் இண்டலிஜென்ஸ் எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன், பல்வேறு தகவல்களை உள்வாங்கிக்கொண்டு அதில் இருந்து கற்று பின் மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். 


இந்த AI  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களின் தகவல்களைக் கொண்டு அவர்களின் டிஜிட்டல் வடிவம் உங்களுடன் பேசினால் ?


https://www.hereafter.ai/ செயலி இதற்கு உதவுகிறது. நீங்கள் இந்த செயலையில் பணம் செலுத்திவிட்டால் போதும், அது உங்கள் வாழ்க்கை தொடர்பான பல கேள்விகளைக் கேட்கும். நீங்கள் பதில் அளிப்பதைச் சேமித்து AI உதவியுடன் உங்கள் பதில்களிலிருந்து உங்களைப் பற்றி ஒரு பேட்டர்ன் உருவாக்கும். உங்களை பற்றி ஒரு ப்ரோபைல் உருவாக்கிவிடும். ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், உங்களை நேசிப்பவர் தொடர்ந்து உங்களுடன் பேச முடியும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிப்பீர்கள், அதாவது உங்கள் டிட்ஜிட்டல் அவதார் பதிலளிக்கும்.


வயதானவர்களிடம் கேள்விபட்டியளைக் கொண்டு பதில்களை வாங்கி இந்த செயலியில் போட்டுவிட்டால் போதும். சாட் வடிவில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். மிக நெகிழ்ந்த தருணங்களைப் பேசி மகிழலாம்.   


AI தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியான large language models எனும் தொழில்நுட்பம் இதற்கு உதவியாக இருக்கிரது. இந்த LLM தான் Chat GPT முதலான தொழில்நுட்பத்தின் அடிப்படை. 


Large language model என்பது ஆர்டிபிஷியல் நியுரல்நெட்வெர்க் எனும் ஒரு அல்காரித முறையில் அதிநவினமான டீப் லேர்னிங் அல்காரித முறையை அடிப்படையாகக் கொண்டது. இந்த டீப் லேர்னிங் அல்காரிதம், நீங்கள் உள்ளிடும் தகவலைச் சேகரித்து அதை தொகுத்து, ஒழுங்கமைத்து, பகுப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் கற்றுக்கொள்ளும். கற்றதின் அடிப்படையில் கேள்விக்கான பதில்களை உருவாக்கிக் கொடுக்கும் Generative AI தொழில்நுட்பத்தின் ஒரு பகுதி.


சார்லஸ் என்பவர் வயதான தன்  தாய்க்கு கான்சர் நோய் இருப்பதை அறிந்து அதிர்ந்து போய்விட்டார். தன் தாயின் பிரிவை எப்படி கையாளப் போகிறோம் என மனம் நோந்து இருந்த போது தான் Hearafterai பற்றிக் கேள்விப்பட்டார். அவர்களை நாடியபோது சார்லஸுக்கு மிகப்பெரிய கேள்விகளின் பட்டியலை கொடுத்தார்கள். அதற்கு தன் தாயிடம் பதில்களை பெற்று அந்நிறுவனத்திற்கு அனுப்பினார். அவர்கள் சில நாட்களிலேயே உங்கள் தாயின் டிஜிட்டல் வடிவம் தயாராகிவிட்டது எனக் கூறினார்கள். அவர் அப்போது அதைப் பயன்படுத்தவில்லை, சில மாதங்களில் அவர் தாய் இறந்த போது அந்த செயலியின் உதவியுடன் தன் தாய் பேசுவதைக் கேட்டு மேலும் மனம் வெதும்பினார். தன் தாயின் இறுதிச்சடங்கில் அந்த செயலியுடன் கலந்துகொண்டார். இறுதிச் சடங்கைப் பற்றி தன் தாயின் குரலில் அவர் என்ன நினைக்கிறார் என AI வடிவில் தன் தாய் குரலில் கேட்ட போது கதறி அழுதார். ஆனால் மிக வேகமாகப் பிரிவின் சோகத்திலிருந்து அவர் மீண்டு விட்டார். மாதம் ஒருமுறை தன் தாயுடன் பேசுகிறார். 


டிஜிட்டல் க்லோனிங் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் குரலை அப்படியே மீட்டுருவாக்கும் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. நீங்கள் எழுதிய கவிதையை ஒபாமா குரலில் படிக்க வைக்க முடியும்.. அந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் இறந்தவரின் குரல் பதிவுகளின் சாம்பல் கொடுத்தால் டிஜிட்டல் க்ளோனிங் அவரின் குரலிலேயே புதிய பதில்களைப் படிக்கும்..


வீடியோ வடிவில்

https://storyfile.com/ எனும் நிறுவனம் ஒரு படி மேலே போய் உங்களுக்கு பிடித்தவர்களுடன் இறந்துவிட்டால் வீடியோவில் பேசுங்கள் என்கிறது. நீங்கள் எடுத்துக் கொடுக்கும் வீடியோக்களின் அடிப்படையில் அவர்களை அனிமேஷனாகவோ அல்லது மனித வடிவிலோ அவர்களை நடை உடை பாவனைகளை வீடியோக்களாக்கி உங்களுடன் பேச வைக்கும். இது சாட் வார்த்தைகள், ஒளி வடிவிலிருந்து மேம்பட்டது. இவர்களும் தகவல்களை கேள்வி பதில் வழியாக தான் பெருகிறார்கள்.

 ஆனால் https://www.myyov.com/ எனும் நிறுவனம் ஒரு படி மேலே போய் உங்கள் அன்பானவரின் சாட்களை (டெக்ஸ்ட், வாட்சப்) கொடுங்கள் அதை உள்ளிடுவதின் மூலம் மேலும் பல அன்பான, நெருக்கமான தகவல்களைச் சேகரிக்கும் முடியும் அதனால் அவர்கள் இறந்துவிட்ட்டாலும் அவர்களின் அன்பு டிஜிட்டலில் கிடைக்கும் எனச் சொல்லுகிறார்கள்.


Grief tech எனும் இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதனைச் சார்ந்த நிறுவனங்களின்   முயற்சிகளும் மகிழ்ச்சியைத் தருகிறது.


ஒருவரின் பிரிவிலிருந்து மெல்ல வெளிவர இந்த தொழில்நுட்பம உதவும் என உளவியல் நிபுணர் கூருகிறார் ஆனால் அதே நேரம் இந்த தொழிலிநுட்பத்திற்கு அடிமையாகும் சிலர் சமூக நடைமுறைக்கு ஏற்றார் போல் நடந்துகொள்ளாமல் வேறு மன நலச் சிக்கலில் சிக்கவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கிறார்.


மறுபக்கம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், தகவல் பாதுகாப்பு, அந்தரங்க தகவல் பாதுகாப்பை பற்றி கேள்வி கேட்கின்றனர். பல விவாதங்கள் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் மனித சமூகத்தின் ஒரு மைல்கள். இதனை அடிப்படையாக கொண்டு மேலும் என்ன மாதிரியான வளர்ச்சியை இந்த Grief tech பார்க்கப் போகிறது என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

வினோத் ஆறுமுகம்.

06/02/2023 










No comments:

Post a Comment

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

  ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக...