Monday, February 6, 2023

ஒரு எஞ்சினியரின் சமூக கடமை…


மன்மித் சிங் ஒரு மெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் (Mechatronics Engineer). எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் எனக் கனவு காண்ட எஞ்சினியர், ஆனால் அவருக்குச்  சவாலாக வந்தவர் மன்மித்தின் அண்ணன் மகன் ப்ரனீத். ப்ரனித்திற்கு மூளை முடக்குவாத நோய் (Cerebral palsy).  


ப்ரனித்திற்கு சிறு வயதிலேயே செரிபிரல் ப்ளாஸி எனும் மூலை முடக்குவாத நோய் வந்துவிட்டது. அந்த சிறுவனால் நம்மைப் போல நடக்க முடியாது. உயிர் வாழும் வரை படுக்கை தான். உதவிக்கு எப்போதும் ஆள் இருக்க வேண்டும்.

ஒருவர் நடக்காமலிருந்தால் உடலளவில் எவ்வளவு சிக்கல் ?

உலகத்தைப் பிறர் உதவியில்லாமல் பார்க்க முடியாது. அதை விட நடக்காமல் எந்நேரமும் உட்கார்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் இருந்தால் உடலில் ஆயிரம் சிக்கல்கள் வரும். உடல் பருமன், கொழுப்பு அதிகரிப்பு, சர்க்கரை வியாதி, கிட்னி பாதிப்பு, இருதய பாதிப்பு எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.. ஒருசராசரி மனிதனின் நிலையே இதுவென்றால்  சிறு வயதில் ஓடி ஆடி விளையாட வேண்டிய பிள்ளையின் நிலை? அதுவும் முடக்குவாதத்தால் பாதிக்கப் பட்டால்?


மன்மித் சிங்கின் வீட்டில் இருப்பவர்கள் மன்மித்தை பல உதவிகள் கேட்கத் தொடங்கினார்கள். மன்மித்திற்கும் தன் அண்ணன் மகனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணம். அவர் படித்தது மெக்கட்ரானிக்ஸ், ரோபாட்களை பற்றிய படிப்பு. மெக்கனிகல் எஞ்சினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரின் படிப்புகளின் கலவை. சரி ப்ரனித்திற்கு ஏதாவது ரோபாட் உதவியுடன் நடக்க வைக்க முடியுமா என முயற்சி செய்தார்.


பலன் தோல்வி. சில ரோபாட்டுகள் இருந்தன, அவை பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டவை.. அதுவும் ஒன்றும் சிறப்பாக இல்லை.ஏகப்பட்ட கோளாருகள். 


செரிபிரல் ப்ளாசி எனும் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பற்றி மன்மித் சிங்க் ஆய்வு செய்தார். பல நூறு குழந்தைகள், பெரியவர்கள்.. 

மன்மித்தின் மனதில் ஒரே விஷயம் தான் ஓடுயது. 


நாம் எதற்காக எஞ்சினியரிங் படித்தோம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய மட்டுமா? இல்லை சமூகத்தில் இருக்கும் இது போன்ற மனிதர்களுக்கு  உதவவா? நம் படிப்பு உதவவில்லை என்றால் எஞ்சினியரிங் படிப்பின் அவசியம் என்ன? எஞ்சினியரிங்க் படிப்பு என்பத சமூக பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு சமூக முன்னேற்றத்திற்காக   ஏதாவது செய்யதானே?” 


உடனடியாக ப்ரனித் மாதிரியான சிறுவர்களை நடக்க வைக்க உதவும் ரோபாட்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். தன் நண்பரான ராகுலும்   இணைகிறார். தங்கள் முயற்சியைத் தொடங்குகிறார்கள். இதற்கு நிச்சயம் பல விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், பலரின் உதவி வேண்டும். ஒரு சிறு டீம் வேண்டும்.. அதற்குப் பணம் வேண்டும். பணம் என்றால் முதலீடு, ஆனால் ஆய்வு வெற்றியடையும் வரை லாபம் என்று எதுவும் இருக்காது. சம்பளம் கூட கொஞ்சம் கஷ்டம் தான்.

ஒரு சிறு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஆரம்பித்து முதலீடுகளைத் தேடிச் செல்லுகிறார்கள். 

இங்கு தான் அடுத்த சிக்கல் வருகிறது..


நீங்கள் ஒரு புது கண்டுபிடிப்பைச் செய்ய வேண்டுமென்றால் இண்டஸ்டிரியில் ஒரு வழிமுறை உள்ளது. முதலில் அதன் சாத்திய கூறுகளை நிரூபிக்க வேண்டும், அதன் பின் தான் ப்ராஜக்ட்டே தொடங்கும். 

மன்மித் மற்றும் ராகுல் சொல்லும் எந்திரங்கள் சாத்தியமற்றவை, வெறும் கல்லூரி இறுதியாண்டு ஆய்வு ப்ராஜட்களை போல் உள்ளது. இதன் வியாபார சாத்தியம் குறைவு.. லாபம் குறைவு என நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.


மன்மித் மற்றும் ராகுலுக்கு இதன் வியாபார அம்சம் இரண்டாவது, ப்ரனிதை போல் இருக்கும் பிள்ளைகள் நடக்க வேண்டும் அது தான் முதல் குறிக்கோள்.   சாத்திய படுத்தியே தீர வேண்டும் அது தான் முதன்மையானது.. 


மன்மித் நண்பர்கள், சராசரி நிறுவன முறைகளுக்கு எதிராக, அவர்கள் இருந்த சாத்தியப்படும் முறைகளைப் பின்பற்றி மாடல்களை உருவாக்க தொடங்குகிறார்கள்.


சரி மாதிரிகளை உருவாக்கி சோதனை செய்ய வேண்டுமல்லவா?


சோதனை என்றால் வெறுமனே ப்ரனித்தை மட்டும் வைத்துச் செய்ய முடியாது. தங்கள் ரோபோட் வடிவமைப்பின் போதே மருத்துவர்கள் அதன் மருத்துவ ரீதியான சாதக பாதகங்களை சுட்டிக்காட்ட வேண்டும். பல சிறுவர்களிடம் சோதனை செய்ய வேண்டும்..

ஒரு ரோபோட் உதவியுடன் ஒரு பிள்ளை சில அடிகள் நடந்துவிட்டால் மட்டும் போதாது, அந்த ரோபோட்டின் வடிவமைப்பு அவர்களின் உடல் பகுதிகளை அழுத்தம் தந்து சேதப்படுத்திவிட கூடாது. 

அந்த பிள்ளைகள் வேறு பாதிக்கப்பட்ட பிள்ளைகள், தங்களின் வலியும், வேதனையையும், பாவம் சொல்லக் கூடாது தெரியாத பிள்ளைகள்..  மருத்துவமனை துணையில்லாமல் இந்த திட்டம் நகராது ஆனால் மருத்துவமனையோ, மருத்துவர்களோ இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. 

நிறுவனங்கள் ஒரு முறையைப் பின்பற்றுகின்றன, அதனை ஒட்டி அவர்களுடன் இணைந்து வேலை செய்வது தான் மருத்துவர்களின் அப்போதைய நிலை.பாதுகாப்பும் கூட. ஒரு ஸ்டார்ட் அப், வழக்கமான முறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் இரண்டு எஞ்சினியர்களை  அவர்கள் நம்ப தயாராக இல்லை..


இதுவரை மன்மித் மற்றும் அவரின் நண்பரும், இது ஒரு நிறுவனம், வெற்றிகரமாக ரோபோட்டை உருவாக்கினால், நிறைய லாபம் பார்க்கலாம் என நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் முதலீட்டிற்காக தங்கள் கனவை விட்டு ஏதோ ஒருமாதிரி ஒரு ரோபோட்டை உருவாக்கி இருக்கலாம். ஆனால் இவர்களோ, தங்கள் கண் முன் காணும் ப்ரனித்தை போன்ற பிள்ளைகள் நலன் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன், வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள். யாராக இருந்தாலும் உடைந்துபோய்,. ஒரு வேலை தேடிக்கொண்டு ஏசி அறையில் செட்டில் ஆகி இருப்பார்கள்.. இவர்கள் எஞ்சினியர்கள்.. உண்மையான எஞ்சினியர்கள். 

எஞ்சினியரிங் படிப்பு  எனப்படுவது  சமூக மேம்பாட்டிற்காக தங்களை அர்ப்பணிப்பது என நம்புபவர்கள். இன்று இந்த உலகம் இயங்க காரணமான எஞ்சினியர்களின் தியாகத்திற்கு ஈடான சம்பளத்தை உங்களால் ஒரு போது கொடுக்க முடியாது.. அடுத்து எஞ்சினியர் என்பவர் அனைத்து தடங்கல்களையும் விடாமல் கடந்து முன்னேறிச் செல்பவர்.. இல்லையென்றால் எஞ்ச்னியர்கள் இதுவரை உருவாக்கி இருக்கும் சாதனைகள்,  கோபுரங்கள் எழாமலேயே போயிருக்கும்.. 

தங்களின் முயற்சியைத் தொடருகிறார்கள். முதலில் தங்கள் உருவாக்கிய ரோபோட்டில் பொம்மைகளை வைத்துப் பரிசோதிக்கிறார்கள். அதற்கு உதவும் மருத்துவர்களைக் கொண்டு பொம்மைகளுக்குச் சேதம் வராமல் ஒரு ரிப்போட் தயார்.. அதைச் சோதனை செய்து விளக்கி மருத்துவமனைகளின் நம்பிக்கையை வெல்கிறார்கள்..

அடுத்து இந்த சோதனை முடிவுகளைக் கொண்டு பல பெற்றோர்களை அணுகி தங்கள் பிள்ளைகளை வைத்து சோதனை செய்ய அழைக்கிறார்கள்.. 

  வீட்டில் முடங்கிப் போயிருக்கும் தன் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்வு வராதா என ஏங்கிய பெற்றோர்கள் சிலர் சம்மதிக்கிறார்கள்.. பல விதமான சோதனைகள், முன்னேற்றங்கள், இடர்பாடுகளைக் கடந்து அவர்களின் ரோபோட் பிள்ளைகளைத் துன்புறுத்தாமல், மெல்ல  நடக்க வைக்க உதவுகிறது..

அதன் பின் பல பெற்றோர்கள், பல மருத்துவமனைகள் இவர்களை நோக்கிப் படை எடுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் முகத்திலும் அந்த மகிழ்ச்சியைப் பார்க்க  நாடுகிறார்கள்.. வெற்றிகரமான ரோபோட் முயற்சிக்குப் பின் இன்று அதை பெரும் அளவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் மூளை முடக்குவாதத்தால் முடங்கிப் போய் இருக்கும் சிறுவர்களைச் சூரியனின் வெளிச்சத்தில் நடந்து, விளையாட வைக்கும் முயற்சியில் உள்ளார்கள்..


மீண்டும் ஒரு முறை நாம் படிக்கும் படிப்பு பல சமூக பிரச்சனைகளைத் தீர்க்கத் தான். பலரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தத் தான். தொழில்நுட்பத்தின் ஒரே வேலை நம் சிக்கல்களைத் தீர்த்து நம்மை முன்னேற்றத்தான்.. அந்த விதத்தில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் நம் சோகங்களைத் துடைக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..

  


வினோத் ஆறுமுகம்

06-02-2023


No comments:

Post a Comment

Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

  ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக...