மரபணு ஒரிகமி என்று ஒரு தொழில்நுட்பம் உள்ளது. அதேதான் ஒரிகமி என்றால் நீங்கள் காகிதத்தை வைத்து பல உருவங்கள் செய்கிறீர்களே அதேதான் ஆனால் இங்கு நாம் மரபணுவை வைத்து பல வடிவங்களை செய்யப் போகிறோம். ஏன் செய்ய வேண்டும்?
Targeted Drug delivery என்று மருத்துவத்தில் ஒரு தேவை உள்ளது. நீங்கள் மருந்துகளை உட்கொள்ளும் போது அதன் பக்க விளைவுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பில் சிக்கல் என்றால் அந்த உடல் உறுப்பிற்கு தேவையான மருந்தை தான் கொடுப்பார்கள். அந்த மருந்து சிக்கலுக்குள்ளான உடல் உறுப்பை சரி செய்யும். ஆனால் அதே மருந்து ரத்தத்தில் கலந்து வேறு ஒரு உடல் உறுப்புகுள் சென்றால் அங்கே புது சிக்கல்களை உருவாக்கும். மருத்துவத்தில் இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை இதை தீர்க்கத்தன் டார்கெட்டட் டிரக் டெலிவரி என்ற ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் கொடுக்கும் மருந்து எந்த உடல் உறுப்பு தேவையோ அங்கு சரியாக மருந்தை செலுத்துவது.
நம்மிடம் மருந்து உள்ளது ஆனால் அதை குறிப்பிட்ட உடல் உறுப்பு எப்படி செலுத்துவது என்பதுதான் இந்த ஆய்வுகள். அதில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தீர்வு இந்த மரபணு ஒரிகமி. #NanoBilogy எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மரபணு Scaffolds கொண்டு ஒரு மருந்தை குறிப்பிட்ட உடல் உறுப்பிற்கு செலுத்துவதற்கு தேவையான ஒரு வடிவத்தை உருவாக்குவார்கள். நம் புரிதலுக்காக சொல்கிறேன் ஒரு பெட்டி போன்றோ அல்லது ஒரு பந்து போன்றோ மரபணு ஸ்கேப் போல்டுகளைக் கொண்டு ஒரு வடிவத்தை உருவாக்கி அதில் குறிப்பிட்ட மருந்தை செலுத்தும் போது எந்த உடல் உறுப்பிற்கு தேவையோ அங்கு செல்லும்.
நான் இதை எளிதாக விளக்கி விட்டேன் ஆனால் இது மிகவும் சிக்கலான ஒரு தொழில்நுட்பம். ஒவ்வொரு உடலுறுப்பிற்கும் தேவையான வடிவத்தை கண்டுபிடிப்பதும் அந்த வடிவத்தை பின்னுவதும் மிகவும் சிக்கலானது. அண்மைய காலம் சில நம்பிக்கையான முடிவுகளை இந்த ஆய்வுகள் கொடுத்துள்ளது வரும் காலத்தில் இது மிகப்பெரிய துறையாக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment