பொன்னியின் செல்வனில் ஏன் யாரும் கறுப்பாக இல்லை : Jessica Heidt பற்றி .
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் காட்டப்படும் அனைத்து தமிழ் நில கதாபாத்திரங்களும் சிவப்பாகவே காட்டப்படுகிறது. ஆனால் இந்த கட்டுரை பொன்னியின் செல்வன் படத்தைப் பற்றியது அல்ல உங்களுக்கு ஜெசிக்கா ஹைடிட் என்பவரை அறிமுகப்படுத்த.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்கும் போது அது நடந்த காலகட்டத்தில் தமிழர்களின் நிறம் என்பது கருப்பாகவும் மாநிறம் ஆகும் இருந்ததாகவே பல குறிப்புகள் கூறுகின்றன. சும்மா இருநூறு ஆண்டுகளில் கூட தமிழகத்தின் பயணம் செய்த பலரின் குறிப்புகளிலும் தமிழக மக்களின் கருமை நிறத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அறிவியல் படியும் தமிழ் நிலம் சார்ந்த இடத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் கருப்பு நிறத்தோல் அவர்களின் வாழ்வியலை எளிமையாக உதவி இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பல கலப்புகள் மற்றும் அதில வீண அறிவியல் தோல் மேலாண்மை காரணமாக நிறங்களில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதை நாம் அறிகிறோம்.
ஆனால் பொன்னியின் செல்வன் நடப்பதாக கூறும் காலகட்டத்தில் வாழ்ந்த கதாபாத்திரங்களை காட்டும் போது ஏன் இவர்கள் கருமை நிறத்தை தவிர்த்தார்கள் என்பது புரிந்து கொள்ள முடியவில்லை. பொதுவாக தமிழ் சினிமாவில் வெண்மையான நடிகையை கூட்டி வந்து கருப்பு மை தடவையாவது கருமையாகவே காட்டுவார்கள்.
பொன்னியின் செல்வன் படம் வந்து ஓய்ந்து விட்டதாலும், அந்தப் படத்தைப் பற்றி நிறைய பேர் பேசி விட்டதாலும் நாமும் அதன் பின்னால் செல்ல வேண்டாம். அதற்கு அவர்கள் பல காரணங்களை கூறக்கூடும். ஆனால் நான் இங்கு பேச வருவது தமிழ் சினிமாவில் கலாச்சார ரீதியாக உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை பற்றி.
கருமை நிறம் என்றால் அழகில்லை சிவப்பு நிறம் தான் அழகும் மேன்மையும் என்பது ஆரியர்களாலும் பின்னால் வெள்ளைக்காரர்களாலும் கலாச்சார ரீதியாக நம் மீது திணிக்கப்பட்ட ஒரு தவறான கருத்து. கருமை என்றால் அடிமை என்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் கருமை நிறத்தை மிகத் தாழ்வானதாக காட்டி அவர்கள் வியாபாரம் செய்வதோடு ஒரு கலாச்சார யுத்தத்தை நம் மீது திணிக்கிறார்கள். கருமை நிறம் என்பது தாழ்வு மனப்பான்மைக்கான நிறம் என நமக்கு தாழ்வு மனப்பான்மையின் ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய ஒரு மோசமான ஆதிக்க வர்க்க கருத்தை சினிமாக்களிலும் விளம்பரங்களிலும் ஊடகங்களின் வாயிலாகவும் நம் மீது மிக எளிதாக திணித்து விடுகிறார்கள். அந்த கருத்தின் நீச்சு தான் பொன்னியின் செல்வனின் வரும் கதாபாத்திரங்களின் நிறம்.
நிற்க.
ஒரு இயக்குனருக்கு சுதந்திரம் உள்ளது அதே நேரம் ஒரு இயக்குனர் என்பவர் இந்த சமூகத்தில் இருந்து வருபவர். சினிமா என்பதும் வியாபாரம் தொடர்பானது பெரும்பான்மை மக்களை ஈர்த்தால் தான் அவர்களால் லாபம் பார்க்க முடியும். இந்த இரண்டு கருத்தும் இணையும் புள்ளியில் பெரும்பான்மை மக்களின் மனதில் இருக்கும் ஒரு விஷயம் இயக்குனரையும் தாக்கி அந்த இயக்குனர் தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய ஆதிக்கவருக்கு கருத்துக்களை தன் சினிமாவில் அனுமதிக்க செய்து விடுவார்.
இந்த கட்டுரை சினிமாவையும் இயக்குனர்களையும் இழிவுபடுத்த அல்ல மாறாக இதை எப்படி எதிர்கொண்டு வெளிவரலாம் என்பதை பற்றி தான்.
இதற்கு தான் பிக்சார் நிறுவனத்தில் திரைக்கதை மேற்பார்வையாளராக இருக்கும் ஜெசிக்கா ஹைடேட் (Jessica Heidt) ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளார்.
பிக்சர்(PIXAR) நிறுவனம் என்பது அனிமேஷன் தொடர்பான திரைப்படங்களை உருவாக்கி பல பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டிய நிறுவனம். பிக்சாரின் அனிமேஷன் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அந்தப் பிக்சர் நிறுவனத்தின் கதை மற்றும் திரைக்கதை பிரிவில் பணிபுரிபவர் தான் ஜெசிக்கா ஹைடேட். இவர் ஒரு திரைக்கதை எழுத்தாளர்.
பல்வேறு பிக்ஸார் நிறுவனத்தின் திரைக்கதைகளை அலசி ஆராய்ந்த போது ஜெசிக்கா ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறார், பிக்சார் நிறுவன திரைகதைகளில் ஆண் கதாபாத்திரங்களுக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கும் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளது. இது ஒரு வகையான பாலின சமத்துவத்தை தடுப்பதாக உள்ளது. ஒவ்வொரு படத்திலும் அதிகமான ஆண் கதாபாத்திரங்களும் மிகக் குறைவான பெண் கதாபாத்திரங்களும் இருப்பதை அவர் கவனித்தார். நிச்சயம் இதை சரி செய்ய வேண்டும் என அவரின் பயணத்தை தொடங்கினார்.
அவர் எதிர்கொண்ட முதல் சிக்கல் படைப்பு சுதந்திரம். ஒரு திரை கதையை உருவாக்குபவருக்கு நிச்சயம் கருத்து சுதந்திரமும் படைப்புச் சுதந்திரமும் தேவை. என்பதால் சரியாக எத்தனை கதாபாத்திரங்கள் என்பதை அவரால் எண்ணிக்கையுடன் உருவாக்க முடியாது என்று கூறினார்கள்.
ஆனால் ஜெசிக்கா எடிட் முன்வைத்த வாதம் ஒரு திரைக்கதையாளர் மையக்கருவை எடுத்துக்கொண்டு அதற்கான கதாபாத்திரங்களையும் சூழலையும் உருவாக்குகிறார் அதாவது திட்டமிட்டு இன்ஜினியரிங் செய்கிறார். அப்படி இருக்க பயிற்சிகளின் மூலம் தாராளமாக இந்த பாலின சமத்துவ திரைக்கதைகளை படைப்பு சுதந்திரத்துடன் உருவாக்க முடியும் என்பதை உறுதியாக வாதிட்டார். பிக்சார் நிறுவனத்தில் வேலை செய்த பல திரைக்கதையாளர்கள் ஜெசிக்காவை புரிந்து கொண்டார்கள்.
அடுத்ததாக ஜெசிக்கா ஒரு மென்பொருளை உருவாக்கினார். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உருவாக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு திரை கதையை உள்ளீடாக கொடுத்தால், அதில் உள்ள பாலின சமத்துவத்தை கதாபாத்திரங்களின் எண்ணிக்கை வசனம் போன்றவற்றிலிருந்து சுட்டிக்காட்டும். அந்த ஆய்வு அறிக்கையை திரைக்கதையாளருக்கு ஜெசிக்கா அனுப்புவார். அதன் அடிப்படையில் திரைக்கதையையும் வசனங்களையும் மேம்படுத்துவார்கள்.
அடுத்ததாக ஜெசிக்கா ஹைடிட் கண்டுபிடித்தது பிக்சார் நிறுவனத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் கதாநாயகர் உட்பட அனைவருமே வெள்ளை இனத்தவர் ஆக காட்டப்பட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டிய பின் கருப்பின மக்களை கதாநாயகனாகக் கொண்ட திரைப்படங்களும் பின்னால் திரைக்கதையில் கருப்பின மக்கள் சுட்டிக்காட்டும் கதாபாத்திரங்களும் புதிதாக சேர்க்கப்பட்டன.
சோல் என்ற படம், பிக்ஸர் நிறுவனத்தில் முதல் கறுப்பின ஹீரோவை கொண்ட படம்.பிக்ஸார் நிறுவனத்தில் தொடங்கிய இந்த சிறு திரைக்கதைப்பு புரட்சி இன்று உலகம் முழுவதும் பலராலும் ஏற்கப்பட்டு வருகிறது. திரைக்கதை உருவாக்கத்தில் ஈடுபடும் அனைவருக்கும் தங்களுக்கே தெரியாமல் தங்கள் நினைவில் ஆதிக்க கருத்துக்களும் சமத்துவ பேதங்களும் உள்ளேன் நுழைந்திருக்கும். திரைக்கதை மற்றும் வசனத்தில் இது வெளிப்படும். அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஆனால் ஜெசிக்கா எடிட் போன்ற சமூக நீதி பற்றிய புரிதல் கொண்டவர்கள் திரைக்கதை மேற்பார்வையாளராக அமர்த்தி அந்த திரை கதைகளை அலசி ஆராய்ந்து அதை சமத்துவ பேதமற்ற திரைக்கதையாக உருவாக்க வேண்டியது தான் நம் கடமை. இதை தேவையில்லாமல் படைப்பு சுதந்திரத்திற்குள் ஒளிந்து கொண்டு கடமையை மறுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.