Tuesday, February 21, 2023

3-D BioPrinting: கிட்னி, இதயம் வேண்டுமா Copy, Paste ஒரு Print

 வருங்காலம் ஒருவருக்கு கிட்னி பெயிலியர். மாற்று கிட்னி வேண்டும் மருத்துவமனையில் அவரின் கிட்னியை ஸ்கேன் செய்து அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை ஒரு பயோ பிரிண்டருக்கு அனுப்புகிறார்கள். சிறிது நேரத்தில் கிட்னி ரெடி. அப்படியே அறுவை சிகிச்சை. விஷயம் முடிந்தது. கிட்னி, இதயம், என எந்த உறுப்பாக இருந்தாலும் சில மணித்துளிகளில் ரெடி. இது தான் 3-டி பயோபிரிண்டிங் தொழில்நுட்பம்.



3-டி பிரிண்டிங் எனும் தொழில்நுட்பம் இப்போது மிகப் பிரபலமாகி வருகிறது ’ரெசின்’கள் எனும் ஒருவித சிறப்பு ப்ளாஸ்டிக்களை கொண்டு நீங்கள் ஒரு வரைபடத்தை உள்ளீட்டால் அதை அப்படியே பிரதி எடுத்து ஒரு உருவத்தை உருவாக்கிவிடும். அதாவது பிரிண்ட் செய்துவிடும். இப்போது சிலைகள் எல்லாம் இந்த 3-டி ப்ரிண்ட் எனும் தொழில்நுட்பம் கொண்டு தான் செய்கிறார்கள். இது வளர்ந்து ஒரு வீட்டின் மாடல் கொடுத்தால் காலி இடத்தில் வீட்டையே கட்டி கொடுத்துவிடுகிறது. சரி   ப்ளாசிடிக் ப்ரிண்டிங் போலவே மனித உறுப்புகளை ப்ரிண்ட் செய்ய முடியுமா என நினைத்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கனவு தான் இந்த 3-டி ப்ரிண்டிங்கை உருவாக்கி உள்ளது.

நாம் சாதரண பிரிண்டரில் இங்க் பயன்படுத்துவோம், 3-டி ப்ரிண்டரில் ரெசின் போன்றவற்றை ’இங்க்’காக பயன்படுத்துவோம். 3-டி பயோ பிரிண்டரில் என்ன இங்க்?

பயோ-இங்க் என்பார்கள். இதில் உயிரி செல்கள், அதை இணைக்கும் பிற உயிரி புரதங்கள் சேர்த்த ஐட்ரோஜெல் தான் பயோ இங்க்.

இதை எதற்கு பயன்படுத்தலாம்?

இப்போதைக்கு மருந்து தயாரிக்க, மருத்துவம் படிக்க, அறுவை சிகிச்சை பயிற்ச்சி மேற்கொள்ள பயனப்டுத்துகிரார்கள். இதனால் நமக்கு உண்மையான உறுப்புகளை ஆரய்ச்சி செய்த பயனும் கிடைக்கிறது அதே நேரம் ஆபத்தும் இல்லை. வழக்கமாக மருந்துகலை சோதிக்க மிருகங்கள் , மனிதர்கள் என பல சோதனைகள் மேற்க்கொள்ள வேண்டும் இதனால் பல மருத்துவ சிக்கலும், ஆபத்தும் உள்ளதால் அனுமதி கிடைப்பது மருத்துகளை தள்ளி போடும். மாறாக இந்த பயோ பிரிண்டிங் உறுப்புகள் , செல் மாதிரிகள் மீது ஆய்வுகளை நடத்தினால் புரிதலும் கிடைக்கும், பிந்நாட்களில் சோதிக்க போது பல மருத்துவ ஆபத்துக்களை தவிற்கலாம்.

ஆனால் இந்த தொழில்நுட்பத்தை   வளர்த்தெடுப்பதின் மூலம் நாளை மிக எளிதாக உடல் உறுப்புகளை பயோபிரிண்ட் செய்யலாம். இது மனித குலத்தின் மிகபெரும் சிக்கலை தீர்ததாக மாறும். வாழ்வை நீட்டிகவும், கான்சர் மாதிரியான நோய்களில் இருந்து இளம் மரணங்களை தடுக்கவும் உதவும்.  


Monday, February 20, 2023

Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?

 Twitter for Porn: செக்ஸ் படங்கள் தான் கருத்து சுதந்திரமா?


கடந்த வருடம் டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கியதிலிருந்தே கோமாளிதனங்கள் உச்சத்தில் சென்றது. அவரின் முட்டாள்தனமான வாதங்களை முன் வைக்கும் டிவிட்கள் பலரை கோபப்படுத்தின. டிவிட்டரில் பணிபுரிந்தவர்கள் ராஜினாமா செய்தார்கள். முதலீட்டாளர்கள் பின் வாங்கினார்கள். மேலும் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் வருங்காலத்தில் டிவிட்டரில் Porn எனப்படும் ஆபாச சமூக வலைதளமாக மாற்றபடலாம் என தகவல் வெளிவந்துள்ளது.


எலன் மஸ்க் தன்னை கருத்து சுதந்திர காவலனாகவும், இறைதூதராகவும் நினைத்துக் கொண்டிருப்பவர். அனைத்து கோமாளிதனங்களையும் இந்த கருத்து சுதந்திரம் எனும் வார்த்தையின் பின் போய் ஒளிந்துக்கொள்வார். இப்போது டிவிட்டர் நிறுவனத்தின் வருமானததை கூட்ட ஏன் ஆபாச படங்களை அனுமதிக்க கூடாது என ஒரு திட்டத்தை சொல்லி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார்.


இண்டர்நெட்டில் 60சதவீதம் பயன்பாடு போர்ன் எனப்படும் ஆபச படங்கள், சாட்கள் தான். நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தாலும் அதில் எப்படியாவது இந்த ஆபாச தனங்கள் நுழைந்துவிடும். டம்ப்ளர் (Tumblr) எனும் வலைதளத்தை கலை ரீதியான குறும் வலைப்பூவாக டிவிட்டர் போல் மக்கள் பயனப்டுத்த உருவாக்கினார்கள். ஆனால் ஐந்தே வருடத்தில் அது ஆபாச படங்கள், செக்ஸ்டிங் செய்யும் தளமாக மாறியாது. ஆனால் கொள்கை பிடிப்புள்ள டம்ப்ளர் நிறுவனமோ பல லட்சங்கள் செலவு செய்து ஆபாச குப்பைகளை நீக்கி வருகிறது. 


அதே போல் ஒன்லி பேன்ஸ் எனும் வலைதளம் தங்கள் திறமைகளை காட்டி மக்களிடம் பணம் வசூலிக்கும் பேவால் வீடியோ (paywalled Video) எனும் முறையை அறிமுகப்படுத்தியது. இதில் ஒரு இசை கலைஞர் இசைத்தோ, பாடியோ தன் திறைமையை வெளிகாட்டும் வீடியோ வெளியிடுவார், விருப்பமுள்ள ரசிகர்கள் அவருக்கு லைவில் பணம் அனுப்பலாம். ஆனால்  செக்ஸ் படங்களில் நடிப்பவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் Cybersex வருமானத்திற்காக இதை பயனப்படுத்த தொடங்க இன்று அது முழு ஆபாச வலைதளமாக மாறிவிட்டது. 

டம்பளர் போராடுகிறது. ஆனால் ஒன்லிபேன்ஸ் நிறுவனமோ இதை ஆபாச வலைதளமாகவே மாற்றிவிட்டது.

இதை மனதில் வைத்து நாம் ஏன் டிவிட்டர் தளத்தில் ஆபாச வீடியோக்களை அனுமதிக்க கூடாது என எலன் மஸ்க் ஒரு திட்டம் தீட்டியுள்ளார். எலான் மஸ்க் கடந்த வருடம் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்தார், டெஸ்லா கார் நிறுவனம் சொதப்புகிறது. டிவிட்டரை வாங்குகிறேன் என செய்த அலப்பரையும் நஷ்ட்டம் தான்.   இவரின் கோமாளி  தனங்களை பார்த்தா சுமார் 100 நிறுவனங்கள் டிவிட்டருக்கு விளம்பரங்கள் கொடுப்பதை நிறுத்திக்கொண்டது. மொத்த பண தேவையையும் சாமாளிக்க தான் இந்த ஆபாச பட திட்டம்.

டிவிட்டரில் ஏற்கனவே 135 கண்டெண்ட் ஆபாச படங்கள் தான். கருத்து சுதந்திரம் எனும் பெயரில் பல ஆபாச வீடியோக்களை டிவிட்டர் அனுமதிக்க வேண்டும் என எலன் மஸ்க் ஏற்கனவே பச்சை கொடி காட்டிவிட்டார். இப்போது அதை பணமாக்க வேண்டும். ஒன்லி பேன்ஸ் செய்வது போல், வீடியோக்கள் காட்டுபவர்களுக்கு வரும் பணத்தில் ஒரு கமிஷன் வாங்கலாம். Paid DM முறையில் செக்ஸ்டிங் அனுமதித்து ஒரு கமிஷன் பார்க்கல்லாம்  என பல கனவுகளுடன் இருக்கிறார். 


தலையில் அடித்துக்கொள்ளும் தொழில்நுட்ப விமர்சகர்கள், மற்றும் சிலிகான் வேலி செய்தியாளர்கள். இப்படியாவது டிவிட்டர் தளம் ஆபாச குப்பையாகி மக்கள் அனைவரும் டிவிட்டரில் இருந்து  வெளியேறி அது நாசாமாய் போகட்டும் என சாபம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



 


Saturday, February 18, 2023

மரணத்தை வெல்ல Super பணக்காரர்கள் நடத்திய ரகசிய மாநாடு.

 அறிவியல் துணைகொண்டு மரணத்தை வெல்ல முடியுமா? இது தான் உலகின் சூப்பர் பணக்காரர்களின் ஒரே கேள்வி, தேடல். எவ்வளவு பணம் இருந்து என்ன பயன், வயதாகி, மூப்பு வருகிறதே? ஒருநாள் செத்துப் போய்விடுமே என்ற கவலை. அதற்குத் தீர்வு தேடும் ஒரு மாநாடு தான் Longevity Investors Conference. 



Longevity என்றால் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தால், மரணத்தை முழுமையாக வெல்ல முடியுமா எனத் தெரியவில்லை, குறைந்தபட்சம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போடலாம் தானே? ஆனால் இந்த Longevity Investors Conference சுருக்கமாக LI மாநாடு என்பது வெறும் வாழ்வை நீட்டிப்பது மட்டுமல்ல, வயதாகி மூப்பு வருகிறதே அதை வெல்லவும் தான். இதை Anti Aging என்பார்கள். அதுமட்டுமல்ல  வாழும்போதே புத்துணர்ச்சியுடன் இருக்க Rejuvenating Tech.

இந்த மாநாட்டின் நோக்கமே, மேலே நாம் பார்த்த மூன்று துறைகளில் என்ன ஆய்வுகள் நடக்கின்றன, யாருக்கு முதலீடுகள் தேவை, வருங்காலத்தில் என்ன புது ஆய்வுகள் வரப்போகிறது போன்றவற்றின் தகவல் கிடைக்கும். 


உலகின் முதன்மை பயோடெக் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், பெரும் பணக்காரர்கள் கலந்துகொண்டு விவாதிப்பார்கள். நீங்கள் பணக்காரர்களின் மனதை வென்றால் முதலீடுகள் கிடைக்கும். 

மாநாட்டில் பல நம்பகமான ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஈஸ்ட் பாக்டீரியா முதல் சில நுண்ணுயிரிகளின் வயதை வெற்றிகரமாகப் பரிசோதனையில் நீட்டியிருந்தார்கள். உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் சில வித நொயெதிர்ப்பு-குறைப்பு மருந்துகள் வெற்றிகரமாக ஆயுளை நீட்டிக்க உதவுவதாகக் கூறினார்கள் (25% சதவீதம் தான் அந்த வெற்றி). சில எலிகளுக்கு மனித பதின்வயது இளைஞர்களின் ரத்தம் கொடுத்து ஆய்வு செய்தபோதும், சில நம்பகமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள் மேலும் விலங்குகள் மனிதர்கள் என்று விரிவடைய வேண்டும். இன்னொரு பக்கம் நன்றாக உடற்பயிற்சி செய்து தசைகளை பலமாக்குங்கள் புத்துணர்ச்சிக்கும், மரணத்தைத் தள்ளிப் போட உதவும்  போன்ற ஆய்வு முடிவுகளும் இருந்தது.


இந்த மாநாட்டில் கலந்துகொள்ள டிக்கெட் விலை வெறும் 8 லட்ச ரூபாய் தான், அப்படி நீங்கள் கட்ட தயாராக இருந்தாலும் அவர்கள் கவனமாகத் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். புத்துணர்ச்சி அளிக்கும் பானங்கள் , உணவுகள் விருந்திலிருந்தது. உணவின் ருசி வேற லெவல் என்று அதில் கலந்துகொண்ட புட் ப்லாகர் ஒருவர் சொல்லி கேள்விப்பட்டேன். 

விருப்பமிருந்தால் கலந்துகொள்ளவும் : https://www.longevityinvestors.ch/


AI + UWSN : கடல் தண்ணீருக்குள் வையர்லெஸ் இண்டர்நெட்

பூமியின் கால் பாகம் நிலம் என்றால் முக்கால் பாகம் கடல் தான். கடல் தண்ணீர். இந்த கடல் தண்ணீருக்குள் தொடர்புகொள்ளத் தேவை இருக்கிறது, கடலை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.காரணம்,

  1. கடலில் உள்ள உயிரினங்களைப் பற்றி தெரிந்துகொள்ள. கடலை ஆய்வு செய்ய.

  2. கடல் அடியில் உள்ள எரிமலைகளை ஆய்வு செய்ய.

  3. கடல் ஏற்படு சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து கட்டுப்படுத்தக்

  4. கடலில் புதைந்த போன நகரங்களை அகழ்வாராய்ச்சி செய்ய,

  5. கடலில் புதைந்துள்ள   இயற்கை வளங்கள், கனிம வளங்களை  மனிதன் பயன்படுத்த.

  6. ராணுவ கண்காணிப்பு செய்ய 

எனக் காரணங்கள் அதிகம். மண்ணில் இண்டர்நெட் தொழில்நுட்பம் பல அசாத்தியங்களை நிகழ்த்தியுள்ள நிலையில், அது போன்ற தங்கு தடையின்றி ஒரு வையர்லெஸ் இண்டர்நெட் கடலுக்குள் அமைந்தால் கடலை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம், கடலின் மர்மங்களை தெரிந்துக்கொண்டுவிடலாம். 


நிலத்தில் இண்டர்நெட் என்பது ஆப்டிகள் பைபர் கேபிள்,விண்வெளியில் சாட்டிலைட்கள், காற்றில் மைக்ரோ வேவ் என்ற மூன்று தொழில்நுட்பங்கள் உதவியுடன் வைர்லெஸ் இண்டர்நெட்டை சாத்திய படுத்தியுள்ளோம். இதில் கவனிக்க வேண்டியது உலக இண்டர்நெட்டை சாத்தியப்படுத்தும் ஆப்டிகள் பைபர் கேபிள்கள் கடலுக்கடியில் தான் செல்கிறது. அந்த கேபிள்களை கண்காணிக்கவும் நமக்கு கடலுக்கடியில் ஒரு தொடர்பு அமைப்பு தேவைப் படுகிறது,.

கடலுக்கடியில் தொடர்பு அமைப்பை ஏற்படுத்துவதில் உள்ள முதல் சிக்கல். கடல் முழுவதும் ஆப்டிகள் கேபிள் போட முடியாது. சாத்தியமில்லை. காற்றும் இல்லை. சாட்டிலைட்டும் உதவாது. நிலத்தில் உதவும் தகவல் தொடர்பு முறை தண்ணீருக்குள் வேலை செய்யாது.

கடல் தண்ணீருக்குள் தொடர்பு கொள்ள புதிய தொழில்நுட்பம் தேவை அது தான் Underwate Wireless Sensor network.

 இந்த  Underwater Wireless Sensor network சுருக்கமாக UWSN பல் சென்சார் எந்திரங்களைக் கொண்டு அதிக அதிர்வுகள் கொண்ட மைக்ரோவேவ்களை அருகில் இருக்கும் அடுத்த சென்சார் எந்திரத்திற்குச் செலுத்தும்,அதைப் பெற்றுக்கொள்ளும் ஒரு மோடம் அடுத்த எந்திரத்திற்குத் தகவல் அனுப்பும். அப்படியே கடலுக்கு மேலே உள்ள எந்திரத்திற்கு தகவல் கிடைத்தவுடன் அதை அருகில் இருக்கும் கண்காணிப்பு மையத்திற்கு எளிதாக ஆனுப்பிவிடும். 


கடலுக்குக்கடியில் கடலின் தட்பவெப்ப நிலை, அதன் பண்புகள், மாற்றங்கள் எனப் பல தகவல்களை இந்த சென்சார்கள் சேகரித்துக்கொண்டே இருக்கும். 

ஆனாலும் இதில் பல சிக்கல். கடலுக்கடியில்  தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களால் இந்த தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றவாறு கண்காணித்து எந்திரங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொண்டே இருக்க வேண்டும். இது மனிதர்களாக மட்டும் செய்ய முடியாது. ஒன்றிரண்டு என்றால் பரவாயில்லை சில நூறு சென்ஸார்கள் என்றால் சாத்தியமே இல்லை. 

   

இந்த சிக்கல் தான் இத்தாலியில் இருக்கும் அகழ்வாராய்ச்சி தலத்திற்கும் வந்தது. இத்தாலியில் உள்ள  ’பேயீ’ நகரம் 2000 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமான கடற்கரை உல்லாச விடுதி என்று வைத்துக்கொள்ளுங்கள். மார்க் ஆண்டனி முதல் ஜூலியஸ் சீசர் வரை பொழுதுபோக்கிற்காக இங்கே வந்து உல்லாசமாக இருந்த நகரம். கடலக்கடியில் மூழ்கிவிட்டது. பிற்காலத்தில் கடலுக்கடியில் மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி தளமாக மாறிவிட்டது. UWSN மூலம் ஆரம்பக்காலத்தில் ஒரளவு பணிகள் சிறப்பாக நடந்தாலும் இதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல் தலைவலியாகவே இருந்தது. இதற்குத் தீர்வு காண சபீன்ஸா பல்கலைக்கழகத்தில் தலைமை ஆய்வாளர் சிஹிராபெட்ரோலி முனைந்தார். அவர் ஆய்வுக் குழுவுடன் பல தீர்வுகளை பரிசோதித்துப் பார்த்தார்கள். அதில் ஒன்று AI உதவியுடன் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். மனிதர்களின் சாத்தியமில்ல தொடர்பமைப்பின் மாற்றங்களைத் தொடர்ந்து கடலை கண்காணித்து அதன் அடிப்படையில் செய்யும் ஏ.ஐ. மென்பொருளை உருவாக்கினார்கள். மிகவும் மேம்படுத்தப்பட்ட ஏ.ஐ வசதியுடனான ஒரு UWSN வடிவமைத்து சோத்தி பார்த்தார்கள். வெற்றி. 

இதை W-Sense என்றழைக்கிறார்கள். இதன் உண்மையான தொழில்நுட்ப அமைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை, காப்புரிமைக்குக் காத்திருப்பதால் வெளியிடவில்லை. ஆனால் பரிசோதனையாக பேயீ  அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது.


ஆகாயம், காற்று, நிலம் இப்போது நீர் வரை வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை மனிதன் உருவாக்கிவிட்டன. இதனால் பல இயற்கை பேரிடர்களைக் கண்காணிக்க முடியும். நெருப்பின் உதவியுடன் ஒரு வையர்லெஸ் தகவல் தொடர்பமைப்பை மனிதன் உருவாக்கிவிட்டால் போதும்..


பின்குறிப்பு:

இந்த கட்டுரையில் UWSN பற்றிய மிக அடிப்படை தொழில்நுட்ப தகவல் புரிதலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது இது முழுமையான தொழில்நுட்ப விளக்கமல்ல..

 

Wednesday, February 15, 2023

AntiViagra: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை Bio weaponஆ ?



ஒருவழியாக ஆண்களுக்கான on- demand கருத்தடை மாத்திரைகளுக்கான சோதனையில் வெற்றி அடைந்துள்ளார்கள் Weill Cornell மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.. 


அனைத்து கருவுற்றலும் மகிழ்ச்சி அளிப்பதில்லை, பல கருவுற்றல் தவறுதலாக நடப்பவை. கருத்தடைக்கு இப்போது பெண்களுக்கான சில மாத்திரைகள், ஆணுக்கு ஆணுறைகள், இருவருக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை மொத்தமாக கருத்தடை ஏற்படுத்திவிடும். பின்னால் விருப்பப்பட்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.


ஒருபக்கம்  குழந்தை பெறு பிரச்சனைக்கான ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்க மறுபக்கம் விரும்பாத,விபத்தாக கருவுற்றலை தடுக்கும் ஆய்வுகளும் நடந்துவருகிறது.


இப்போது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கும் இந்த மாத்திரைகள் தற்காலிகமான கருத்தடை ஏற்படுத்தும்.  ஒருநாள் வரை இதன் தாக்கம் இருக்கும். மாத்திரை உட்கொள்ளும் வடிவில் தான். எல்லாம் ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறது. இந்த மாத்திரையை உட்கொண்டால் விந்தணு கருமுட்டையில் நீந்த சிக்னல் கொடுக்கும் Soluble adenylyl cyclase (sAC) எனும் புரதத்தை தற்காலிகாமக தடுத்து நிறுத்துகிறது இதனால் விந்தணு செயலற்று கரு உண்டாகமல் தடுக்கப்படுகிறது.

கிட்டவிட்ட வையாக்ரா மத்திரையின் எதிர்ப்பத வேலை செய்கிறது. இப்போது எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி, அடுத்து முயல் மீது சோதனைகள் நடக்கும். இறுதியாக மனிதர்களுக்குச் சோதனை நடக்கும். ஆனால் Weill Cornell நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே இந்த மருந்துகளை பெருமளவு விளம்பரப் படுத்தி உற்பத்தி செய்ய Sacyl Pharmaceuticals எனும் நிறுவனத்தைத் தொடங்கிவிட்டார்கள். 

வரும் 2050க்குள் உலகின் மக்கள் தொகை 10 பில்லியின் ஆகிவிடும் என கணக்கிட்டுள்ளார் ஒரு வகையில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை மாத்திரை  பல நன்மைகளைக் கொடுக்கலாம். ஆனால் இதன் அரசியல் பக்கத்தை நாம் பார்க்கத் தவறவும் கூடாது. இது bio weaponஆக இன அழிப்புக்கு பயணப்படுத்தப்படுமா? இதன் பக்க விளைவுகள் என்ன? எனப் பல கேள்விகளுக்குப் பதில் வேண்டும் தானே..


வினோத் ஆறுமுகம்

15-02-2023

thiruvinod4u@gmail.com

@thiruvinod4u   


Friday, February 10, 2023

முதுகுவலி: செயற்கை Spine Discஆக வைரம்

நம் முதுகெலும்பில் உள்ள வட்டுகள் (Spinal Disc) தேய்ந்துவிட பல காரணங்கள் இருக்கிறது. சில நேரத்தில் விபத்தில் கூட முது பலமாகச் சேதமாகலாம். இதற்கு பெரும்பாலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தண்டுவடத்தில் உள்ள வட்டுகளை செயற்கை வட்டுகள் பொருத்தி மாற்றிவிடுவார்கள். உலகம் முழுவதும் பலர் இடந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்கிறார்கள். இதன் ஆண்டு சந்தை மதிப்பு மாத்திரம் 1 பில்லியின் டாலர்.



இந்த அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் நடப்பதில் இருந்து படுப்பதுவரை பல சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கையே முடங்கி படுத்த படுக்கையாகி விடுவார்கள். எந்நேரமும் முதுகு வலியுடன் அவதிப்பட வேண்டும்.

இந்த அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது பொருத்தப்படும் செயற்கை வட்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. மெல்ல மெல்ல அவையும் தேய்ந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.  மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பிரச்சனைக்கு Dymicron எனும் நிறுவனம் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது. 

வைரம். 

ஆம் Polycrystalline Diamond எனும் செயற்கை வைரத்ததினால் செய்யப்படும் வட்டுகளை இந்த அறுவை சிகிச்சைக்கு பயனப்படுத்துகிறார்கள். இதுவரை சுமார் 500 நோயாளர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.   இவர்கள் இதற்காக சுமார் 83 காப்புரிமைகளையும் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேலும் ஆய்வுகள் செய்தால் வெற்றிகரமாக இதன் அறுவை சிகிச்சை செலவையும் குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு சுமார் 8 லட்சம் பேர் தங்கள் முதுகெலும்பு பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.

  2. உலகம் முழுவதும் இந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் சந்த மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர்.

  3. இந்தியாவில் இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டனம் வசூலிக்கிறார்கள். 


 

Pornhubன் கறுப்பு பக்கம்: சிதைக்கப்படும் சிறுமிகள்

 ஒரு நாள் தன் 15 வயது மகளைக் காணாமல் ஒரு அம்மா தவித்துப் போயிருந்தார், எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தும் பயனில்லை. பல மாதங்கள் கழித்து ஒரு நாள் தெரிந்த நபர் தன் அலைப்பேசியில் சில காணொளிகளை அந்த அம்மாவிடம் காட்டினார். அதில் இருப்பது நிச்சயம் தன் மகள் தான் என்பது அந்த அம்மாவிற்குத் தெரிந்துவிட்டது. அந்த காணொளிகள் போர்ன்ஹப் எனும் வலைத்தளத்தில் இருந்தது. அதில் அந்த சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்படும் சுமார் 50 காணொளிகள் இருந்தன…





போர்ன்ஹப்(Pornhub) உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்கு இது ஒரு செக்ஸ் படங்களைக் காட்டும் வலைத்தளம். பொழுதுபோக்கிற்கு  எப்படி யுட்யூபோ, படங்கள் பார்க்க எப்படி நெட்ப்ளிக்ஸ் அது போல் செக்ஸ் படங்களைப் பார்க்க போர்ன்ஹப் வலைத்தளம்.

அண்மையில் இந்த வலைத்தளம் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது குறிப்பாகச் சிறுவர் பாலியல் காணொளிகள் தொடர்பான சர்ச்சைகள்.

9 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகள் மற்றும் வயதுவந்த பெண்கள் கற்பழிக்கப்படும் காணொளிகள், ஒருவரின் அனுமதியில்லாத அந்தரங்க காணொளிகள், புகைப்படங்கள் இந்த வலைத்தளத்தில் குவிந்துள்ளது. சிறுவர் பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இந்த தளம் பெரும் காரணமாகி வருகிறது. 


இதைப் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.

போர்ன்ஹப் வலைத்தளம் ஒரு மாதத்திற்கு சுமார் 35 கோடி முறை பார்க்கப்படுகிறது -இது நெட்ப்ளிக்ஸை விட அதிகம். இந்த வலைத்தளத்தில் ஒரு நாளைக்கு சுமார் 30 கோடி முறை விளம்பரங்கள் காட்டப்பட்டு அதன் மூலம் பணமீட்டப்படுகிறது. இந்த தளத்தில் ஒரு பயனாளர் வீடியோவை பதிவேற்றம் செய்துவிட முடியும், அதனால் அவர் பணம் சம்பாதிக்கவும் முடியும்.  ஒரு வருடத்திற்கு சுமார் 13 லட்சம் மணிநேர வீடியோக்கள் புதிதாக பதிவேற்றம் செய்யப் படுகிறது.போர்ன்ஹப் வலைத்தளம் பெரும்பாலும் இலவசம், சில வீடியோக்கள்  மட்டும் தான் காசு கொடுத்துப் பார்க்க முடியும். பல லட்சம் வீடியோக்கள் இலவசமாக உள்ளது.


உண்மையில் நீங்கள் தொடர்ந்து செய்திகளைப் படிப்பவராக இருந்தால் போர்ன்ஹப் பற்றிய நல்ல செய்திகளைத் தான் கேட்டிருப்பீர்கள். போர்ன்ஹப் பல சமூக உதவிகளைச் செய்து வருகிறது, நன்கொடை கொடுக்கிறது. கொரோனா காலத்தில் தம் வலைத்தளத்தை இலவசமாக்கியது. இந்த வலைத்தளத்தின் வருமானத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணம், நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்த தளத்தின் விளம்பரங்கள் வரும். அங்கு சில நொடி விளம்பரம் காட்ட நீங்கள் கோடிகளைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து விளம்பரம் வருகிறதென்றால் புரிந்துகொள்ளுங்கள்.

ஆனாலும் இந்த வலைத்தளத்திற்குத் தீராத கறுப்பு பக்கம் ஒன்றுள்ளது. அதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்… 

Thursday, February 9, 2023

Chatgpt இந்துமத கடவுளை அவமானப் படுத்துகிறதா?


மஹேஷ் விக்ரம் ஹெக்டே புதிதாக வந்திருக்கும் cahtgptஐ அனைவரும் போல பரிசோதித்து பார்த்தார்.



“கிருஷ்ணரைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு” எனக் கேட்கிறார்.

சாட்ஜிபிடி ஒரு நகைச்சுவையைச் சொல்கிறது.

அடுத்து முகம்மதுவைப் பற்றி ஒரு நகைச்சுவைக் கேட்கிறார். ஆனால் சாட்ஜிபிடி மறுக்கிறது. சரி ஜீசஸைப் பற்றி ஒரு நகைச்சுவை சொல்லு என்கிறார். அதையும் சாட்ஜிபிடி மறுக்கிறது. கோபடைந்த மஹேஷ் இதை அப்படியே ஸ்கிரின் ஷாட் எடுத்து டிவிட்டரில் பகிர்கிறார். பல ஆயிரம் பேர அதை ஷேர் செய்கிறார்கள்.

தன் சகாககளுக்கும் சொல்லி இருக்க வேண்டும். மஹேஷ் யார் என்றால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிந்தொடர்படுபவர். போஸ்ட்கார்ட் எனும் ஆன்லைன் பத்திரிக்கையை நடத்துபவர், சுமார் 1.85 லட்சம் பேர் டிவிட்டரில் இவரை பின் தொடருகிறார்கள். 


இவர் போட்ட ஸ்க்ரீன் ஷார்ட்டை தொடர்ந்து ஜி தொலைக்காட்சி ஹிந்தி பதிப்பில் ரோஹித் ரஞ்ன் சுமார் 25 நிமிட நிகழ்ச்சியை கொடுக்கிறார். சாரம் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து ஹிந்து மதத்தைக் கேலி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மற்றொரு ஹிந்துத்வா அறிவுஜீவியான ராஜிவ் மல்ஹோத்ராவும் இணைந்துகொண்டார். மிகப் பெரிய சதிக்கோட்பட்டை உருவாக்கிவிட்டார்கள்.


சாட்ஜிபிடி  இயங்கும் விதம் என்பது முழுக்க முழுக்க உள்ளிடும் தகவலை பொறுத்தது. ஆனால் மிகச் சிக்கலான இனம், மொழி, மதம் தொடர்பான கேள்விகளுக்கு மிக எச்சரிக்கையாகப் பதில் சொல்லுமாறோ அல்லது பதைலை தருவதை தவிர்க்குமாறோ தான் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கும். ஜீசஸ் பற்றி நகைச்சுவை சொல்ல மறுத்துவிட்டதைப் போல.

ஆரம்பக் கால தொழில்நுட்பத்தில் இது சாதாரணம் தான். சாட ஜிபிடியை பயன்படுத்தும் போதே நீங்கள் இந்த எச்சரிக்கையை வலைத்தளத்தில் கேள்விகள் உள்ளிடும் டெக்ஸ்ட் பாக்ஸ் மேலே சுட்டி காட்டிருப்பதை கவனிக்கலாம். இதைச் சரி செய்யக் கோரிக்கை வைக்கும் போது அவை மெல்லச் சரி செய்யப் படும். முதல் நிலையிலேயே அதன் மீது சதிகோட்பாட்டை முன் வைப்பது இந்தியவின் உலக இமேஜிற்கு  உகந்ததல்ல. தவறு இறுபின் சுட்டிக் காட்டி அதைச் சரி செய்ய வில்லை என்றால் தான் அவர்கள் மேலே சந்தேகம் எழுப்ப வேண்டும். 

சாட்ஜிபிடி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடுபொறியில் ஒரு பகுதியாக இணைக்கப்படப் போகும் இந்த வேலையில் நிச்சயம் இந்த சர்ச்சைகள் அதற்கு ஏதாவது சிக்கலைத் தரலாம்.பொறுத்திருந்து பார்ப்போம். 



வருங்காலம்: Brainternet : இணையத்தில் உங்கள் மூளையை இணைத்தால்?



உங்களுக்குப் பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசை. நீங்கள் நினைத்த மறு விநாடி, உங்கள் எண்ணத்தை உங்கள் கைப்பேசியோ, கணினியோ உள்வாங்கிக்கொண்டு இணையத்தில் போய் உங்களுக்கான பிரியாணியை ஆர்டர் செய்தால்? அது தான் பிரைண்டர்நெட். பல மனிதர்களின் மூளையை இணையத்துடன் இணைப்பது. 



IOT internet of Things கேள்விப்பட்டிருப்பீர்கள் வீட்டில் உள்ள மின் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பம். உங்கள் குளிர்சாதனப் பெட்டி இணையத்துடன் இணைந்திருக்கும், காய்கறிகள், பழங்கள் ஸ்டாக் தீர்ந்த்துவிட்டால் அதுவே இணையத்தில் போய் ஆர்டர் செய்துவிடும். Alexa, Google Home, என இசை கேட்கும் ஸ்பீக்கர்கள் இணையத்துடன் இணைந்து நமக்கான இசையைக் கொண்டு வருகிறது. அதுபோல இது மனித மூளைகளை இணைக்கும் பிரண்டர்நெட். Internet of Thoughts.

விட்ஸ் பலகலைக்கழக ஆய்வாளர்கள், EEG (Electroencephalography) எனப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு மூளை நியுரான்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள உதவும் மின்னோட்ட  அலைகளை எலக்ரோட்கள் உதவியுடன் பதிவு செய்யும் கருவி.

 பதிவான மின்னோட்ட அலைகளை அப்பாடியே இணையத்தில் பதிவேற்றியுள்ளார்கள். மனித மூளையின் மின்காந்த சிக்னல்கள் இணையத்தில் பதிவேற்றப்படுவது இது தான் முதல் முறை.

நியுராலின்க்:

சில ஆண்டுகளுக்கு முன் எலன் மஸ்க் நியுராலிங் எனும்  நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் நோக்கம், மனித மூளையின் உள் ஒரு சின்ன ‘சிப்’ பை இணைத்து, அதன் மூலம் மனித மூலையின் சிக்னல்களை பகுப்பாய்ந்து. அதை இணையத்துடன் இணைக்கும் தொழில்நுட்பம்.


கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், விட்ஸ் பல்கலைக்கழகம், மற்றும் நியுராலிங்கின் கனவு சாத்தியமாகுமா என்பது மிகப்பெரிய கேள்வி.

மனித மூளை மிகவும் சிக்கலான ஒரு உறுப்பு. அது இயங்குகிறது என்பது இன்றும் மர்மம் தான். மூலை தொடர்பான ஆய்வுகள் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கும் நிலையில் அதன் மின்காந்த அலைகளை வைத்து என்ன சிந்தனையோட்டம் எனக் கணிப்பதெல்லாம் ஹிமாலய முயற்சி.

மற்றொரு பக்கம் ஒருவேளை இது சாத்தியமென்றாலும் இதன் சாதகபாதகங்களை பலர் அலசி வருகிறார்கள். மூளையின் சிக்னல்கள் கணினி ’பிட்டு’களாக மாற்றப்பட்டு இணையத்தில் பகிரப்படும் என்றால் அதன் சைபர் செக்யுரிட்டியை பற்றி யார் பொறுப்பேற்றுக்கொள்வது. அண்மைய சைபர் செயுரிட்டி தொழில்நுட்பம் போதுமா? இல்லை இதற்கென சிறப்புத் தொழில்நுட்பங்கள் வேண்டுமா என நிபுணர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 


வினோத் ஆறுமுகம்

09-02-2023


What is Brainternet? , Brainternet in Tamil, Tamil news article.





Tuesday, February 7, 2023

Chatgpt,Bard AI ரகசியம்: கூகுள் ஏன் டிமிண்ட் கெபுருவை நீக்கியது?



Chatgpt பிரபலமாகிவிட்டது, ஆனால் சாட் ஜி.பி.டி முதல் கூகுள் பார்ட் (BARD) வரை AI மென்பொருட்களின் சிக்கல்கள், அதன் ஆபத்துகளைப் பேசிய டிம்னிட் கெபுருவு எனும் AI Ethics ஆய்வாளரைக் கூகுள் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியது. இது பழைய கதை ஆனால் நாம் இன்று இதைத் தான் முதலில் பேச வேண்டும். 




டிமிண்ட் கெபுரு கூகுள் நிறுவனத்தின் பணியாளர். ஆய்வாளர். ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் ஆய்வு பிரிவில் எதிக்ஸ் (ஆய்வு அறம்) ஆய்வராக பணிபுரிந்து வந்தார். இவரின் வேலை வருங்காலத்தில் கூகுள் நிறுவனத்தில் AI தொடர்பான ஆய்வுகளில் கடைப்பிடிக்கப்படும் நேர்மை, அறம், நம்பகத்தன்மையை மேற்பார்வையிட வேண்டும். அது தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட வேண்டும்.


2020ல் OpenAi எனும் நிறுவனம் chatgpt எனும் மென்பொருளை உருவாக்கி வந்த நேரம், கூகுள் நிறுவனமும்  தங்கள் தேடு பொறியில் AI வசதியுடன் கூடிய அல்காரிதம்களை மேம்படுத்தப் பல ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது. இதன் அடிப்படை குறிக்கோள் சாட் வடிவில் பயனாளர்கள் உள்ளிடும் கேள்விகளுக்குத் தகுந்த பதிலைத் தர வேண்டும்.

இதன் இயக்கும் விதத்தை வைத்து இதை Transformers என்று அழைப்பார்கள். இதை முதலில் அறிமுகப்படுத்தியது கூகுள் தான். இவை LLM என்றைழைக்கப்படும். LLM என்றால் Large Language Models. 

LLM என்பது Artificial neural network எனும் ANN அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பு அல்காரிதமான deep learning உதவியுடன் இயங்கும். 


இது எப்படி இயங்குகிறது என்றால், இண்டர்நெட்டில் இருக்கும் தகவல்களைப் பெற்று அதைப் பிரித்து ஒழுங்கமைக்கும். அதை லேபிள் செய்து அதன் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும். இதன் மூலம் சில பரமீட்டர்களை ஒப்பிட்டுக் கற்றுக்கொள்ளும். கற்றதைச் சரிபார்க்கும்.சரிபார்க்க feedbackகளை பெறும், தன் கற்றலை மேம்படுத்திக்கொள்ளும். ஆனால் இதன் கற்றல் என்பது புரிந்துகொள்வதல்ல, தரம் பிரிப்பது. மனிதர்களை போல இவை கற்றுக்கொள்வதில்லை. மாறாகத் தரம் பிரிப்பதைத் தான் கற்றல் என இவர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.  

 இப்போது கெபுருவுக்கு வருவோம். கெபுரு தன் நண்பருடன் இனைந்து ஆய்வு அறிக்கை ஒன்றை அறவியல் இதழில் பிரசுரிக்க முயல்கிறார். இது கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் AI chat மென்பொருட்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது.


முதல் அவர்கள் எச்சரிப்பது மின்சார செலவு.

மிகப்பெரும் இணையத்தின் தகவல் அடிப்படையில் இந்த LLM இயங்க வேண்டும் என்றால் மிகப்பெரிய டேட்டா செண்டர்கள் வேண்டும். அவ்வளவு பெரிய டேட்டா செண்டர்களை இயக்க பல கிலோவாட் மின்சாரம் தேவைப் படும். அவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வெளியாகும் கார்பண்டை ஆக்ட்சைட் அலவு ஓசோனில் ஓட்டை போட போதும். உலகம் முழுவதும் க்ளைமேட் சேஞ் பற்றிப் பேசி வரும் சூழலில் இவ்வளவு மின்சாரத்தைச் செலவழிப்பது என்பது கொஞ்சமும் சரியல்ல என் வாதாடுகிறார்கள்.


அடுத்து ஒருபக்கச் சார்புத் தன்மை: 

இந்த மென்பொருட்கள் நீங்கள் உள்ளிடும் தகவல் அடிப்படையில் தான் அவை கற்றுக்கொள்ளும். இதற்கு வரும் உள்ளீடு தகவல் என்பது இணையத்தில் இருந்து என்பது குறிப்பிடதக்கது. இணையத்தில் ஒரு பொய்யான தகவல்  அதிகம் இருந்து அவை மீண்டும் மீண்டும் இந்த மென்பொருளுக்கு தரப்பட்டால் அவை அதை உண்மையென நம்பிவிட வாய்ப்புகள் அதிகம். 

இங்கு தான் நாம் இதன் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும் இவை முழுக்க முழுக்க தகவலுக்குள் ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்குமே தவிர மனிதர்களைப் போல அதை புரிந்துகொள்ளாது.

மக்கள் மிக எளிதாகத் தவறான தகவல்களை நம்பிவிட வாய்ப்புகள் அதிகம். ஒரு முறை பேஸ்புக்கில் பாலிஸ்தீனியர் ஒருவர் அரபு மொழியில் காலை வணக்கம் என போஸ்ட் போட்டார் அதை பேஸ்புக் மென்பொருள் தவறாக “அவர்களைத் தாக்குங்கள்” என ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்துவிட்டது. காலை வணக்கம் போட்டவருக்குக் காலை நல்லதாக விடியவில்லை கைதுச் செய்யப்பட்டுவிட்டார். 

இவை அனைத்தையும் சுட்டிக் காட்டிய கெபுரு இது போன்ற AI சாட் மென்பொருட்களை உருவாக்கவும், பயனில் விடவும் நிதானம் தேவை , நிரைய ஆய்வுகள் தேவை எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் கூகுள் நிறுவனமோ விடுமுறையில் இருந்த கெபுருவை அப்படியே வேலையை விட்டு நீக்கிவிட்டது.


கெபுரு இன்று வரை போராடிக்கொண்டிருக்கிறார். இந்த மென்பொருட்களின் சாதக பாதகங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.  

  


 




Monday, February 6, 2023

ஒரு எஞ்சினியரின் சமூக கடமை…


மன்மித் சிங் ஒரு மெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் (Mechatronics Engineer). எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தால் லட்சங்களில் சம்பாதிக்கலாம் எனக் கனவு காண்ட எஞ்சினியர், ஆனால் அவருக்குச்  சவாலாக வந்தவர் மன்மித்தின் அண்ணன் மகன் ப்ரனீத். ப்ரனித்திற்கு மூளை முடக்குவாத நோய் (Cerebral palsy).  


ப்ரனித்திற்கு சிறு வயதிலேயே செரிபிரல் ப்ளாஸி எனும் மூலை முடக்குவாத நோய் வந்துவிட்டது. அந்த சிறுவனால் நம்மைப் போல நடக்க முடியாது. உயிர் வாழும் வரை படுக்கை தான். உதவிக்கு எப்போதும் ஆள் இருக்க வேண்டும்.

ஒருவர் நடக்காமலிருந்தால் உடலளவில் எவ்வளவு சிக்கல் ?

உலகத்தைப் பிறர் உதவியில்லாமல் பார்க்க முடியாது. அதை விட நடக்காமல் எந்நேரமும் உட்கார்ந்துகொண்டும், படுத்துக்கொண்டும் இருந்தால் உடலில் ஆயிரம் சிக்கல்கள் வரும். உடல் பருமன், கொழுப்பு அதிகரிப்பு, சர்க்கரை வியாதி, கிட்னி பாதிப்பு, இருதய பாதிப்பு எனப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.. ஒருசராசரி மனிதனின் நிலையே இதுவென்றால்  சிறு வயதில் ஓடி ஆடி விளையாட வேண்டிய பிள்ளையின் நிலை? அதுவும் முடக்குவாதத்தால் பாதிக்கப் பட்டால்?


மன்மித் சிங்கின் வீட்டில் இருப்பவர்கள் மன்மித்தை பல உதவிகள் கேட்கத் தொடங்கினார்கள். மன்மித்திற்கும் தன் அண்ணன் மகனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணம். அவர் படித்தது மெக்கட்ரானிக்ஸ், ரோபாட்களை பற்றிய படிப்பு. மெக்கனிகல் எஞ்சினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரின் படிப்புகளின் கலவை. சரி ப்ரனித்திற்கு ஏதாவது ரோபாட் உதவியுடன் நடக்க வைக்க முடியுமா என முயற்சி செய்தார்.


பலன் தோல்வி. சில ரோபாட்டுகள் இருந்தன, அவை பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டவை.. அதுவும் ஒன்றும் சிறப்பாக இல்லை.ஏகப்பட்ட கோளாருகள். 


செரிபிரல் ப்ளாசி எனும் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பற்றி மன்மித் சிங்க் ஆய்வு செய்தார். பல நூறு குழந்தைகள், பெரியவர்கள்.. 

மன்மித்தின் மனதில் ஒரே விஷயம் தான் ஓடுயது. 


நாம் எதற்காக எஞ்சினியரிங் படித்தோம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய மட்டுமா? இல்லை சமூகத்தில் இருக்கும் இது போன்ற மனிதர்களுக்கு  உதவவா? நம் படிப்பு உதவவில்லை என்றால் எஞ்சினியரிங் படிப்பின் அவசியம் என்ன? எஞ்சினியரிங்க் படிப்பு என்பத சமூக பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு சமூக முன்னேற்றத்திற்காக   ஏதாவது செய்யதானே?” 


உடனடியாக ப்ரனித் மாதிரியான சிறுவர்களை நடக்க வைக்க உதவும் ரோபாட்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார். தன் நண்பரான ராகுலும்   இணைகிறார். தங்கள் முயற்சியைத் தொடங்குகிறார்கள். இதற்கு நிச்சயம் பல விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், பலரின் உதவி வேண்டும். ஒரு சிறு டீம் வேண்டும்.. அதற்குப் பணம் வேண்டும். பணம் என்றால் முதலீடு, ஆனால் ஆய்வு வெற்றியடையும் வரை லாபம் என்று எதுவும் இருக்காது. சம்பளம் கூட கொஞ்சம் கஷ்டம் தான்.

ஒரு சிறு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஆரம்பித்து முதலீடுகளைத் தேடிச் செல்லுகிறார்கள். 

இங்கு தான் அடுத்த சிக்கல் வருகிறது..


நீங்கள் ஒரு புது கண்டுபிடிப்பைச் செய்ய வேண்டுமென்றால் இண்டஸ்டிரியில் ஒரு வழிமுறை உள்ளது. முதலில் அதன் சாத்திய கூறுகளை நிரூபிக்க வேண்டும், அதன் பின் தான் ப்ராஜக்ட்டே தொடங்கும். 

மன்மித் மற்றும் ராகுல் சொல்லும் எந்திரங்கள் சாத்தியமற்றவை, வெறும் கல்லூரி இறுதியாண்டு ஆய்வு ப்ராஜட்களை போல் உள்ளது. இதன் வியாபார சாத்தியம் குறைவு.. லாபம் குறைவு என நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.


மன்மித் மற்றும் ராகுலுக்கு இதன் வியாபார அம்சம் இரண்டாவது, ப்ரனிதை போல் இருக்கும் பிள்ளைகள் நடக்க வேண்டும் அது தான் முதல் குறிக்கோள்.   சாத்திய படுத்தியே தீர வேண்டும் அது தான் முதன்மையானது.. 


மன்மித் நண்பர்கள், சராசரி நிறுவன முறைகளுக்கு எதிராக, அவர்கள் இருந்த சாத்தியப்படும் முறைகளைப் பின்பற்றி மாடல்களை உருவாக்க தொடங்குகிறார்கள்.


சரி மாதிரிகளை உருவாக்கி சோதனை செய்ய வேண்டுமல்லவா?


சோதனை என்றால் வெறுமனே ப்ரனித்தை மட்டும் வைத்துச் செய்ய முடியாது. தங்கள் ரோபோட் வடிவமைப்பின் போதே மருத்துவர்கள் அதன் மருத்துவ ரீதியான சாதக பாதகங்களை சுட்டிக்காட்ட வேண்டும். பல சிறுவர்களிடம் சோதனை செய்ய வேண்டும்..

ஒரு ரோபோட் உதவியுடன் ஒரு பிள்ளை சில அடிகள் நடந்துவிட்டால் மட்டும் போதாது, அந்த ரோபோட்டின் வடிவமைப்பு அவர்களின் உடல் பகுதிகளை அழுத்தம் தந்து சேதப்படுத்திவிட கூடாது. 

அந்த பிள்ளைகள் வேறு பாதிக்கப்பட்ட பிள்ளைகள், தங்களின் வலியும், வேதனையையும், பாவம் சொல்லக் கூடாது தெரியாத பிள்ளைகள்..  மருத்துவமனை துணையில்லாமல் இந்த திட்டம் நகராது ஆனால் மருத்துவமனையோ, மருத்துவர்களோ இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. 

நிறுவனங்கள் ஒரு முறையைப் பின்பற்றுகின்றன, அதனை ஒட்டி அவர்களுடன் இணைந்து வேலை செய்வது தான் மருத்துவர்களின் அப்போதைய நிலை.பாதுகாப்பும் கூட. ஒரு ஸ்டார்ட் அப், வழக்கமான முறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் இரண்டு எஞ்சினியர்களை  அவர்கள் நம்ப தயாராக இல்லை..


இதுவரை மன்மித் மற்றும் அவரின் நண்பரும், இது ஒரு நிறுவனம், வெற்றிகரமாக ரோபோட்டை உருவாக்கினால், நிறைய லாபம் பார்க்கலாம் என நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் முதலீட்டிற்காக தங்கள் கனவை விட்டு ஏதோ ஒருமாதிரி ஒரு ரோபோட்டை உருவாக்கி இருக்கலாம். ஆனால் இவர்களோ, தங்கள் கண் முன் காணும் ப்ரனித்தை போன்ற பிள்ளைகள் நலன் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன், வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள். யாராக இருந்தாலும் உடைந்துபோய்,. ஒரு வேலை தேடிக்கொண்டு ஏசி அறையில் செட்டில் ஆகி இருப்பார்கள்.. இவர்கள் எஞ்சினியர்கள்.. உண்மையான எஞ்சினியர்கள். 

எஞ்சினியரிங் படிப்பு  எனப்படுவது  சமூக மேம்பாட்டிற்காக தங்களை அர்ப்பணிப்பது என நம்புபவர்கள். இன்று இந்த உலகம் இயங்க காரணமான எஞ்சினியர்களின் தியாகத்திற்கு ஈடான சம்பளத்தை உங்களால் ஒரு போது கொடுக்க முடியாது.. அடுத்து எஞ்சினியர் என்பவர் அனைத்து தடங்கல்களையும் விடாமல் கடந்து முன்னேறிச் செல்பவர்.. இல்லையென்றால் எஞ்ச்னியர்கள் இதுவரை உருவாக்கி இருக்கும் சாதனைகள்,  கோபுரங்கள் எழாமலேயே போயிருக்கும்.. 

தங்களின் முயற்சியைத் தொடருகிறார்கள். முதலில் தங்கள் உருவாக்கிய ரோபோட்டில் பொம்மைகளை வைத்துப் பரிசோதிக்கிறார்கள். அதற்கு உதவும் மருத்துவர்களைக் கொண்டு பொம்மைகளுக்குச் சேதம் வராமல் ஒரு ரிப்போட் தயார்.. அதைச் சோதனை செய்து விளக்கி மருத்துவமனைகளின் நம்பிக்கையை வெல்கிறார்கள்..

அடுத்து இந்த சோதனை முடிவுகளைக் கொண்டு பல பெற்றோர்களை அணுகி தங்கள் பிள்ளைகளை வைத்து சோதனை செய்ய அழைக்கிறார்கள்.. 

  வீட்டில் முடங்கிப் போயிருக்கும் தன் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்வு வராதா என ஏங்கிய பெற்றோர்கள் சிலர் சம்மதிக்கிறார்கள்.. பல விதமான சோதனைகள், முன்னேற்றங்கள், இடர்பாடுகளைக் கடந்து அவர்களின் ரோபோட் பிள்ளைகளைத் துன்புறுத்தாமல், மெல்ல  நடக்க வைக்க உதவுகிறது..

அதன் பின் பல பெற்றோர்கள், பல மருத்துவமனைகள் இவர்களை நோக்கிப் படை எடுக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளின் முகத்திலும் அந்த மகிழ்ச்சியைப் பார்க்க  நாடுகிறார்கள்.. வெற்றிகரமான ரோபோட் முயற்சிக்குப் பின் இன்று அதை பெரும் அளவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் மூளை முடக்குவாதத்தால் முடங்கிப் போய் இருக்கும் சிறுவர்களைச் சூரியனின் வெளிச்சத்தில் நடந்து, விளையாட வைக்கும் முயற்சியில் உள்ளார்கள்..


மீண்டும் ஒரு முறை நாம் படிக்கும் படிப்பு பல சமூக பிரச்சனைகளைத் தீர்க்கத் தான். பலரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தத் தான். தொழில்நுட்பத்தின் ஒரே வேலை நம் சிக்கல்களைத் தீர்த்து நம்மை முன்னேற்றத்தான்.. அந்த விதத்தில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் நம் சோகங்களைத் துடைக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை..

  


வினோத் ஆறுமுகம்

06-02-2023


Assistive Tech: பார்வையற்றவர்களுக்கு பார்வையாகும் AI Cloud

  ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தை பார்த்தபோது என் கண்களில் நீர் வந்து நெகிழ்ந்து விட்டேன்.  கண் பார்வை அற்றவர்களின் அவதியை தெரிந்து கொள்வது மிக...